For the first time, two media owners are shortlisted for the Padma Award | முதன்முறையாக இரு ஊடக உரிமையாளர்கள் பத்ம விருதுக்கு தேர்வு

புதுடில்லி: பத்ம விருது தேர்வு பெற்றவர்களில் முதன்முறையாக இந்தாண்டு பத்திரிகையாளர்கள் இருவருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட உள்ளது.

2024ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. 132 பேர் இவ்விருதுக்கு தேர்வு பெற்றனர்.

இவர்களில்
‛‛மும்பை சமாச்சார்” பத்திரிகையின் நிர்வாக இயக்குனர் ஹோர்முஸ்ஜி
நஸர்வான்சி காமா என்பவரும், ‛‛ஜென்மபூமி” பத்திரிகையின் தலைமை செய்தி
ஆசிரியர் குந்தன் வியாஸ் ஆகிய இருவரும் பத்ம பூஷன் விருதுக்கு
தேர்வாகியுள்ளனர். இவர்கள் இருவரும் இலக்கியம் மற்றும் கல்வித்துறையில்
சிறந்த சேவையாற்றியமைக்காக இவ்விருதினை பெறுகின்றனர்.

இவர்கள் இருவரும் ஐ.என்.எஸ். எனப்படும் இந்திய பத்திரிக்கைகள் சங்கத்தில் முக்கிய பொறுப்பு வகித்தனர்.

இதன் மூலம் முதன்முறையாக ஒரே ஆண்டில் இரு ஊடக உரிமையாளர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.