Hero Karizma – ஹீரோ கரீஸ்மா CE001 ஸ்பெஷல் எடிசன் அறிமுகமானது

  • சிறப்பு ஹீரோ கரீஸ்மா CE001 பைக் 100 மட்டுமே கிடைக்க உள்ளது.
  • 210cc லிக்யூடு கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
  • வரும் ஜூலை மாதம் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

ஹீரோ வோர்ல்டு 2024 அரங்கில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள கரீஸ்மா CE001 ஸ்பெஷல் எடிசன் ஹீரோ மோட்டோகார்ப் தலைவர் டாக்டர் பிரிஜ்மோகன் லால் முன்ஜால் நினைவை போற்றும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  குறிப்பாக 100 எண்ணிக்கையில் மட்டுமே கிடைக்க உள்ளது.

CE001 என்றால் Commemorative Edition என குறிப்பிடப்பட்டுள்ள இந்த பைக் ஒரிஜனல் கரீஸ்மா அடிப்படையில்  தயாரிக்கப்பட்டு செமி ஃபேரிங் செய்யப்பட்டு பிரத்தியேகமாக கார்பன் ஃபைபர் பாகங்கள் கொண்டதாக தயாரிக்கப்பட்டுள்ளது.

கரீஸ்மா CE001 பைக்கில் 210cc லிக்யூடு கூல்டு என்ஜின் DOHC (Double Overhead Camshaft) அமைப்பினை பெற்று 9250rpm-ல் 25.5 hp பவர் மற்றும் 7,250rpm-ல் 20.5 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் பொருத்தப்பட்டுள்ளது.

முன்பக்கம் அப்சைடு டவுன் ஃபோர்க் மற்றும் ஒஹில்னஸ் மோனோஷாக் அப்சார்பர், ரேடியல் பிரேக் காலிப்பர் மற்றும் Pirelli டயர்களை கொண்டுள்ளது. கூடுதலாக, Akrapovic எக்ஸ்ஹாஸ்ட் பெற்றுள்ளது.

ஜூலை மாதம் விற்பனைக்கு வரவுள்ள ஹீரோ கரீஸ்மா CE001 விலை ரூ.2 லட்சத்துக்கு கூடுதலான விலையில் வெளியிடப்பட்டு முன்பதிவு டெலிவரி ஜூலை மாதம் துவங்க உள்ளது.

Follow us on Google News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.