வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மாஸ்கோ: ‛‛ உலகின் பொருளாதார வளர்ச்சியில் மிக உயர்ந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அதற்கு பிரதமர் மோடியின் தலைமையே காரணம்” என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறியுள்ளார்.
ரஷ்ய மாணவர் தினத்தை முன்னிட்டு, மாணவர்களுடன் கலந்துரையாடும் போது புடின் கூறும் போது, உலகின் பொருளாதார வளர்ச்சி மற்றும் அதிக வளர்ச்சி கொண்ட நாடு இந்தியா. அதற்கு, தற்போதைய பிரதமரின் தலைமைப் பண்புகள் காரணம் ஆகும். அவரது தலைமையில் தான் இந்தியா இத்தகைய வேகமான வளர்ச்சியை எட்டி உள்ளது.
சர்வதேச அரங்கில் தங்களுக்கு எதிராக செயல்பட மாட்டோம் என உறுதி அளிக்கப்பட்டு உள்ளதால், இந்தியா மற்றும் அதன் தலைமையை ரஷ்யா நம்பியிருக்க முடியும். இந்தியாவை நம்பகத்தன்மை கூட்டாளியாக ரஷ்யா கருதுகிறது.
இந்தியா சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை கடைபிடிக்கிறது. இன்றைய உலகில் இது எளிதான விஷயம் அல்ல.150 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா இதனை செய்வதற்கு உரிமை உள்ளது. பிரதமர் தலைமையில் இந்தியாவின் உரிமை நிறைவேற்றப்பட்டு வருகிறது. இது வெறும் அறிக்கை மட்டும் அல்ல. கூட்டுப்பணியை ஒழுங்கமைப்பதில் இருந்து முக்கியமானது. மேற்குலக நாடுகளின் அரசியல் விளையாட்டு இந்தியாவிடம் எடுபடாது. ஒரு நாட்டையும், அதன் தலைமையையும் நம்பி ஒத்துழைக்க முடியுமா அல்லது அதன் தேசிய நலனுக்கான அந்த நாடு சில முடிவுகளை எதிராக எடுக்குமா ? போன்ற அரசியல் விளையாட்டுகள் இந்தியாவிடம் இருக்காது. இவ்வாறு புடின் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement