வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
திஹோக் (நெதர்லாந்து) : இஸ்ரேல்-ஹமாஸ் இடையே நடைபெற்று வரும் போரில் இனப்படுகொலையிலிருந்து பாலஸ்தீனர்கள் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டியது உரிமை என சர்வதேச நீதிமன்றம் இடைக்காலஉத்தரவினை பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனர்கள் வசிக்கும் காசாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே கடந்தாண்டு அக்டோபர் மாதம் முதல் போர் நீடித்து வருகிறது. இப்போரில் பொதுமக்கள் 25,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரை நிறுத்துமாறு உலக நாடுகளும், ஐ.நா., அமைப்பும் வலியுறுத்தி வருகின்றன.
இந்த விவகாரம் தொடர்பாக இஸ்ரேல் மீது தென்னாப்பிரிக்கா சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அதில் இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு எதிரான போர் என்ற பெயரில் பாலஸ்தீனியர்களை இன படுகொலை செய்து வருகிறது. இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியது.
இன்று நடந்த விசாரணையில் தென்னாப்பிரிக்காவின் நியாயமான கோரிக்கை ஏற்று காசாவில் வசிக்கும் பாலஸ்தீனியர்கள் இனப்படுகொலையிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள உரிமை உள்ளது. இதனை சர்வதேச கோர்ட் அங்கீகரிக்கிறது. இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement