What to watch on Theatre & OTT: ப்ளூ ஸ்டார், சிங்கப்பூர் சலூன்,அனிமல் – இந்த குடியரசு தின ரிலீஸ்கள்

ப்ளூ ஸ்டார் (தமிழ்)

ப்ளூ ஸ்டார்

இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடெக்‌ஷன்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் எஸ். ஜெயக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ப்ளூ ஸ்டார்’. அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். கிரிக்கெட்டே வாழ்க்கையாகக் கருதும் இரு அணிகள் வழியாக சமூக அரசியல் பேசுகிறது இப்படம். காதல், சமூகம், கிரிக்கெட், அரசியல் என கமர்சியல் பேக்கேஜ்கள் நிறைந்த இப்படம் நேற்று (ஜனவரி 25ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

சிங்கப்பூர் சலூன் (தமிழ்)

சிங்கப்பூர் சலூன் விமர்சனம்

கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி, மீனாக்ஷி சௌத்ரி, கிஷன் தாஸ், தலைவாசல் விஜய், லால், சத்தியராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சிங்கப்பூர் சலூன்’. சலூனில் முடிதிருத்தம் செய்யும் சாச்சாவின் (லால்) அபாரத் திறமையைப் பார்த்துத் தனும் பெரிய ஹேர்ஸ்டைலிஸ்ட் ஆக வேண்டும் எனக் கனவு காணும் ஆர்.ஜே.பாலாஜி, `முடிதிருத்துவது வெறும் தொழில் அல்ல கலை’  என தன் கனவை சாத்தியப்படுத்தினாரா என்பதுதான் இதன் கதைக்களம். இத்திரைப்படம் நேற்று (ஜனவரி 25ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

தூக்குதுரை (தமிழ்)

தூக்குதுரை

டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் யோகி பாபு, இனியா, ராஜேந்திரன், பாலா சரவணன், சென்றாயன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தூக்குதுரை’. காமெடி கலாட்டா நிறைந்த இத்திரைப்படம் நேற்று (ஜனவரி 25ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

முடக்கறுத்தான் (தமிழ்)

முடக்கறுத்தான்

கே.வீரபாபு இயக்கி நடித்திருக்கும் தமிழ் திரைப்படம் ‘முடக்கறுத்தான்’. இதில் மகானா, சூப்பர் சுப்பராயன், மயில்சாமி, பாவா லட்சுமணன், முத்துகாளை, வைஷ்ணவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் நேற்று (ஜனவரி 25ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

மலைக்கோட்டை வாலிபன் (மலையாளம்)

மலைக்கோட்டை வாலிபன் | மோகன்லால்

`ஜல்லிக்கட்டு’, `சுருளி’, `நண்பகல் நேரத்து மயக்கம்’ உள்ளிட்ட பிரபல மலையாள திரைப்படங்களை இயக்கிய லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் `மலைக்கோட்டை வாலிபன்’. வரலாற்றுப் படமான இதில் மோகன்லால் நடித்துள்ளார். இத்திரைப்படம் நேற்று (ஜனவரி 25ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Fighter (இந்தி)

Fighter (இந்தி)

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹிருத்திக் ரோஷன், தீபிகா படுகோன், அனில் கபூர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம். ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமான இது நேற்று (ஜனவரி 25ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Local Sarakku (தமிழ்)

Local Sarakku

எஸ்.பி. ராஜ்குமார் இயக்கத்தில் யோகிபாபு, தினேஷ், சிங்கம்புலி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Local Sarakku’. காமெடி திரைப்படமான இது இன்று (ஜனவரி 26ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இந்த வார வெப்சீரியஸ்கள்

Karmma calling (இந்தி) -Disney + Hotstar

Karma calling (இந்தி)

ருச்சி நரேன் இயக்கத்தில் ரவீனா டாண்டன், நம்ரதா ஷெத், வருண் சூட் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தி மொழி வெப்சீரிஸ் ‘Karmma calling’. தான் கடந்த கால வாழ்கையில் நடந்த கசப்புகளை மனதில் வைத்து அதற்குக் காரணமானவர்களை பழிவாங்கத் துடிக்கும் பெண்ணின் கதைதான் இது. இந்த வெப்சீரிஸ் இன்று (ஜனவரி 26ம் தேதி) ‘Disney + Hotstar’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Expats (ஆங்கிலம்) – Amazon Prime Video

Expats

ஆங்கில எழுத்தாளர் ஜானிஸ் ஒய்.கே எழுதிய ‘The Expatriates’ என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது ‘Expats’ வெப்சீரிஸ். லுலு வாங் இதை இயக்கியுள்ளார். இந்த வெப்சீரிஸ் ‘Amazon Prime Video’ ஓடிடி தளத்தில் இன்று (ஜனவரி 26ம் தேதி) வெளியாகியுள்ளது.

Griselda (ஆங்கிலம்) – Netflix

Griselda

ஆண்ட்ரேஸ் பைஸ் இயக்கத்தில் கார்லோ பெர்னார்ட், இங்க்ரிட் எஸ்கஜெடா, டக் மிரோ உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள வெப்சீரிஸ் ‘Griselda’. தொழிலதிபர் கிரிசெல்டா பிளாங்கோ வாழ்வில் நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Masters of the Air (ஆங்கிலம்) – Apple Tv

Masters of the Air

ஜான் ஓர்லோஃப், கேரி ஜோஜி ஃபுகுனாகா, அன்னா போடன், ரியான் ஃப்ளெக், டீ ரீஸ், திமோதி வான் பட்டன் உள்ளிட்டோர் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆங்கில வெப்சீரிஸ் ‘Masters of the Air’. ஆக்‌ஷன், திரில்லர் நிறைந்தப் பறக்கும் படைவீரர்களின் போர்களத்தைப் பற்றிய இந்த வெப்சீரிஸ் ‘Apple Tv’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

தியேட்டர் டு ஓடிடி

Fight Club (தமிழ்) – Disney + Hotstar

Fight Club

‘உறியடி’ திரைப்படத்தின் துணை இயக்குநர் அப்பாஸ் ஏ.ரஹ்மத் இயக்கத்தில் `உறியடி’ விஜய்குமார் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘Fight Club’. இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ‘ஜி ஸ்குவாட்’ நிறுவனம் இப்படத்தை வெளியிட்டுள்ளது. ஆக்‌ஷன் திரைப்படமான இது ‘Disney + Hotstar’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Sam Bahadur (இந்தி) – ZEE 5

Sam Bahadur

மேக்னா குல்சார் இயக்கத்தில் விக்கி கௌஷல், சன்யா மல்ஹோத்ரா, பாத்திமா சனா ஷேக் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Sam Bahadur’. 1971 இந்தியா – பாகிஸ்தான் போரின் போது ராணுவத் தளபதியாக இருந்த சாம் மனேக்ஷாவின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் இது. இத்திரைப்படம் தற்போது ‘ZEE 5’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

அனிமல் (இந்தி, தமிழ், தெலுங்கு) – Netflix

அனிமல்

‘அர்ஜுன் ரெட்டி’, ‘கபீர் சிங்’ படங்களை இயக்கிய சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அனிமல்’. ஆக்‌ஷன், கேங்ஸ்டர் திரைப்படமான இது ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Agent (தெலுங்கு) – SonyLiv

Agent

சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் அகில் அக்கினேனி, மம்முட்டி, சாக்ஷி வைத்யா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்கு திரைப்படம் ‘Agent’. ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமான இது ‘SonyLiv’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Neru (மலையாளம்) – Disney + Hostar

Neru

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், பிரியாமணி, அனஸ்வர ராஜன் உள்ளிட்டோர் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘Neru’. கோர்ட் ட்ராமா திரைப்படமான இது ‘Disney + Hostar’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Banaras (கன்னடம்) – Zee5

Banaras

ஜெயதீர்த்த இயக்கத்தில் ஜெய்த் கான் மற்றும் சோனல் மான்டீரோ ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள கன்னடத் திரைப்படம் ‘Banaras’. இத்திரைப்படம் ‘Zee5’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.