Hero Vida Electric bike – பிரீமியம் விடா எலக்ட்ரிக் பைக் அறிமுகத்தை உறுதி செய்த ஹீரோ மோட்டோகார்ப்

ஹீரோ வோர்ல்டு 2024 அரங்கில் புதிய எலக்ட்ரிக் பைக் மற்றும் ஸ்கூட்டர் அறிமுக திட்டத்தை விடா (Vida) நிறுவனத்தின் பெயரில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் வெளியிட்டுள்ளது. விடா பிராண்டில் ஏற்கனவே சந்தையில் V1 Pro விற்பனையில் உள்ள நிலையில் கூடுதலாக மூன்று எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வரவுள்ளது.

ஹீரோ எலக்ட்ரிக் பைக்

பட்ஜெட் விலை மோட்டார்சைக்கிள் என்பதனை தாண்டி பிரீமியம் பைக்குகளுக்கு மட்டுமே மிகுந்த முக்கியத்துவம் கொடுக்க ஹீரோ விடா பிராண்டில் முதல் பெர்ஃபாமென்ஸ் ரக எலக்ட்ரிக் பைக் மாடல் ரூ.4 லட்சம் விலைக்கு கூடுதலாக அடுத்த 2-3 ஆண்டுகளுக்குள் வெளியிடப்படலாம். ஒன்றல்ல பல்வேறு மாறுபட்ட பிரிவுகளில் பெர்ஃபாமென்ஸ் ரக பைக்குகளை விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது.

கூடுதலாக, பட்ஜெட் விலை பைக்குகள் குறித்தான ஆய்வுகளையும் ஹீரோ மோட்டோகார்ப் மேற்கொள்ள உள்ளது.

vida motorcycle அமெரிக்காவின் ஜீரோ மோட்டார்சைக்கிள் நிறுவனம் எலக்ட்ரிக் பைக்குகளை விற்பனை செய்து வரும் நிலையில் ஹீரோ மோட்டோகார்ப் இந்நிறுவனத்தின் 500 கோடி முதலீடு செய்துள்ளது. இந்த நிறுவனம் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா நாடுகளில் தனது பிரீமியம் பைக்குகளை விற்பனை செய்து வருகின்றது.

zero and hero motocorp

விடா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

வரும் 2024-2025 நிதியாண்டில் மூன்று எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை வெளியிட திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே சந்தையில் உள்ள விடா வி1 புரோ பிரீமியம் ஸ்கூட்டராக உள்ள நிலையில் குறைந்த விலையில் இரண்டு எலக்ட்ரிக் ஸ்கூட்டரை உறுதி செய்துள்ளது.

மேலும் ஹீரோ விடா B2B சந்தையிலும் தனது முதல் மாடலை வெளியிட திட்டமிட்டுள்ளது.

vida upcoming escooter

சமீபத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் மேவ்ரிக் 440 மற்றும் எக்ஸ்டிரீம் 125R என இரு மாடல்களை வெளியிட்டுள்ளது. இது தவிர சவாரஸ்யமான சர்ஜ் S32 எலக்ட்ரிக் வாகனம் மற்றும் கரிஷ்மா CE001 ஸ்பெஷல் எடிசனும் வந்துள்ளது.

Follow us on Google News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.