Hero Surge S32 EV: பொது போக்குவரத்தில் இருந்து நெடுந்தூர போக்குவரத்து வரை எலெக்ட்ரிக் வாகனங்கள்தான் எதிர்காலம் என வல்லுநர்கள் பல ஆண்டுகளாக கருத்து கூறி வருகின்றனர். பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருளுக்கு வருங்காலத்தில் வரக்கூடிய தட்டுப்பாடுகள், சர்வதேச அரசியல் காரணங்கள் ஆகியவை எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு முன்னுரிமையை அளிக்கிறது எனலாம்.
எலெக்ட்ரிக் வாகனங்கள்தான் எதிர்காலம்
வாகன உற்பத்தியாளர்களும் பல்வேறு வகையில் எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரித்து வருகின்றனர். குறிப்பாக, எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களும், எலெக்ட்ரிக் கார்களும் அதிகளவில் காணப்படுகின்றன. இந்தியாவும் அதன் வாகன உற்பத்தியில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கும் முன்னுரிமை அளிக்கிறது.
தமிழ்நாட்டில் கூட இம்மாத தொடக்கத்தில் நடைபெற்ற சென்னை முதலீட்டாளர்கள் மாநாட்டில், VinFast என்ற வியட்நாம் நாட்டை தலைமையிடமாக கொண்ட எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனம் தூத்துக்குடியில் தனது ஆலையை அமைக்க ரூ.16 கோடி முதலீடு செய்திருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
ஹீரோவின் புதிய வகை EV வாகனம்
அந்த வகையில், எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பில், வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் ஒரு புதிய வகை வாகனத்தை வடிவமைத்து அதனை சந்தைக்கும் கொண்டு வந்துள்ளது. ஹீரோ நிறுவனம் அதன் Surge S32 EV வாகனத்தை வெளியிட்டது. இது 2-இன்-1 வகை வாகனமாகும். அதாவது, மூன்று சக்கர ரிக்ஷாவில் இருந்து மின்சார ஸ்கூட்டராக மாறக்கூடியது.
#Hero has unveiled a revolutionary three-wheeler that transforms into a two-wheeler, showcasing the innovative spirit and ingenuity of Indian engineering. It’s amazing to witness such groundbreaking advancements. #Innovation #MakeInIndia pic.twitter.com/yHJPzys5kb
— Harsh Goenka (@hvgoenka) January 26, 2024
Surge S32 EV வாகனம் தயாரிக்கப்பட்டதன் நோக்கத்தை இதில் காணலாம். அதாவது, வணிகத் தேவைகளுக்காக ஒரு மின்சார ரிக்ஷாவாக இயக்கப்படக்கூடிய வகையில் இந்த Surge S32 EV வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் பெருநகரங்களின் நெருக்கடி மிகுந்த போக்குவரத்தில் பயணிக்கவும் உயர் செயல்திறன் கொண்ட மின்சார ஸ்கூட்டராகவும் அதனை மாற்றிவிட்டு நீங்கள் அதனை பயன்படுத்தப்படலாம்.
Surge S32 EV: ரிக்ஷா vs ஸ்கூட்டர்
இந்த Surge S32 EV வாகனத்தின் ரிக்ஷாவில், கேபின், விண்ட்ஸ்கிரீன், லைட்டிங் மற்றும் வேண்டுமென்றால் மழை, வெயிலில் இருந்து பாதுகாக்கக் கூடிய மென்மையான கதவுகள் ஆகியவை உள்ளன. இவை இது ஸ்கூட்டர் என்பதையே மொத்தமாக மாற்றிவடும். LED ஹெட்லைட்கள், இண்டிகேட்டர்கள் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்டேஷனுடன் பொருத்தப்பட்ட Surge S32 EV ஸ்கூட்டர் 3W இன் பவர்டிரெய்ன் மற்றும் பேட்டரியுடன் கையேடு மின்சார இடைமுகம் மூலம் இணைக்கிறது.
இதன் ஆற்றல் வெளியீடு 13.4bhp ஆக உள்ளது. ரிக்ஷாவில் 500 கிலோ வரை கணிசமான சுமையை கொண்டுசெல்லலாம். இது காய்கறிகள், பலசரக்கு போன்றவற்றை சந்தையில் இருந்து சில்லறை கடைகளுக்கு கொள்முதல் செய்வோர் முதல் தெருதோறும் சென்று விற்பனை செய்யும் விற்பனையாளர்களுக்கும் என பல்வேறு வணிக பயன்பாடுகளுக்கு இந்த வாகனம் ஏற்றதாக உள்ளது.
இது ஒருபுறம் இருக்க இரு சக்கர வாகனம் 4bhp வேகமான வேகத்தை வழங்குகிறது. Surge S32 EV வாகனத்தின் ரிக்ஷா 11 kWh பேட்டரி மூலமும், ஸ்கூட்டருக்கு 3.5 kWh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. மூன்று சக்கர வாகனமான ரிக்ஷா மணிக்கு 50 கிமீ வேகத்தில் செல்லும். ஸ்கூட்டர் மணிக்கு 60 கிமீ வேகத்தில் சற்று வேகமாக செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.