புதுடில்லி: துப்பாக்கி சுடுதல் வீராங்கனையான பிரீத்தி ரஜாக், இந்திய ராணுவத்தின் முதல் பெண் சுபேதார் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
விளையாட்டு வீராங்கனையான பிரீத்தி ரஜாக், கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய ராணுவத்தில் இணைந்தார். அவர் சிறந்த முறையில் பணியாற்றியதைத் தொடர்ந்து அவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய ராணுவம், தன் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:
ஹவில்தார் பிரீத்தி ரஜாக், சுபேதாராக பதவி உயர்வு பெற்றுள்ளார். சுபேதார் பதவியை முதன்முறையாக பெண் ஒருவர் வகிப்பது இந்திய ராணுவத்திற்கு பெருமையான தருணமாகும். பிரீத்தி ரஜாக்கின் சாதனை இளம் தலைமுறை பெண்கள் இந்திய ராணுவத்தில் இணைய ஊக்கமளிக்கும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.
சீனாவின் ஹாங்சோ நகரில் சமீபத்தில் நடந்து முடிந்த 19வது ஆசிய விளையாட்டுப் போட்டியின் துப்பாக்கி சுடுதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய மகளிர் அணியில் பிரீத்தி ரஜக்கும் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement