சென்னை: சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் முதன்முறையாக பரிசார்த்த முறையில் யுபிஐ மூலம் டிக்கெட் பெறும் வசதி அறிமுக்கப்படுத்தப்பட்டு உள்ளது. ஏற்கனவே கர்நாடக உள்பட சில மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது சென்னையில் நடைமுறைக்கு வந்துள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனையில் இந்தியா உலக நாடுகளுக்கு முன்னோடியாக திகழ்கிறது. சாதாரண பூ விற்பனை செய்யும் வியாபாரிகள் உள்பட அனைத்து பரிவர்த்தனைகளும் டிஜிட்டலுக்கு மாறி உள்ளன. இதன் தொடர்ச்சியாக பேருந்துகளிலும் பயணச்சீட்டு பெற யுபிஐ வசதியை தமிழ்நாடு அரசு சோதனை முறையில் […]
