
டீப் பேக் பற்றிய விழிப்புணர்வு அவசியம் : ராஷ்மிகா
ஏஐ தொழில்நுட்பம் மூலம் சினிமா நடிகைகளின் போலியான டீப் பேக் வீடியோக்கள் தொடர்ந்து வெளியாகி அதிர்ச்சி அளிக்கின்றன. ராஷ்மிகா, கஜோல், கத்ரீனா கைப், ஆலியாபட், அபிராமி… என இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இதுதொடர்பாக சிலரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதுபற்றி பேட்டி ஒன்றில் கூறிய ராஷ்மிகா, ‛‛இது தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இதுபற்றி பேசினால் விரும்பித்தானே இந்த வேலைக்கு வந்தீர்கள் என்கிறார்கள். நடிகையாக இல்லாமல் இதுவே ஒரு பெண் எதிர்கொள்கிறார் என்றால் என்ன நடக்கும். உண்மையில் அந்த பெண்களை நினைத்து பயம் வருகிறது. ஒருவேளை அதுபற்றி நான் பேசினால் டீப்பேக் என்றால் என்ன?, அது சரியானதா, என குறைந்தபட்சம் மக்களையாவது சென்றடையும். அதுபற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவது அவசியம்'' என்கிறார்.