வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஒட்டாவா: கனடாவின் தேர்தலில் தலையிடும் வெளிநாட்டு அச்சுறுத்தல் என அந்நாட்டு உளவுத்துறை குற்றம்சாட்டி உள்ளது. இது குறித்து விசாரணை நடத்த அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உத்தரவிட்டு உள்ளார்.
கனடாவில், காலிஸ்தான் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு தொடர்பு உள்ளதாக கனடா குற்றம்சாட்டியது. இதனை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது. இந்த விவகாரத்தால் இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில், கனடா உளவுத்துறை வெளியிட்ட அறிக்கை ஒன்றில், இந்தியாவை வெளிநாட்டு அச்சுறுத்தல் என குறிப்பிட்டு உள்ளது. மேலும், கனடாவில் நடக்க உள்ள தேர்தலில் இந்தியா தலையிட்டு, ஜனநாயகத்தை பலவீனப்படுத்த வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக விசாரணை நடத்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உத்தரவிட்டு உள்ளார்.
தேர்தலில் தலையீடு என இந்தியா மீது கனடா குற்றம்சாட்டுவது இதுவே முதல்முறையாகும். ஏற்கனவே, சீனா மற்றும் ரஷ்யா மீது கனடா ஏற்கனவே இதேபோன்று குற்றம்சாட்டி உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement