கலபுரகி : கலபுரகி மாவட்டத்தில், போலியான கிளினிக்குகள் செயல்படுவதாக, குற்றச்சாட்டு எழுந்தது. எனவே கலபுரகி மாவட்டத்தின், பல்வேறு கிராமங்களில் நேற்று காலை சுகாதாரம், குடும்ப நலத்துறை அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள், தாசில்தார் உட்கொண்ட அதிகாரிகள் குழுவினர், அதிரடி சோதனை நடத்தினர்.
பல்வேறு இடங்களில், போலியான கிளினிக்குகள் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சில மருத்துவமனைகளில், அனுமதி பெறாமல், மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது தெரிந்தது. மருத்துவம் படிக்காமல் நடத்தப்பட்ட, 43 போலி கிளினிக்குகளுக்கு சீல் வைக்கப்பட்டன. 109 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
அனுமதி பெறாமல் செயல்பட்ட மருத்துவமனைகளுக்கு, நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement