வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கான்பரா : இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வருண் கோஷ், ஆஸ்திரேலியா பாராளுமன்ற எம்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியா பாராளுமன்றத்தின் மேற்கு ஆஸ்திரேலியா தொகுதி செனட் உறுப்பிராக இருந்த பாட்ரிக் டாட்சென், உடல் நலக்குறைவால் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து இத்தொகுதிக்கு தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த இந்தியா வம்சாவளி வருண் கோஷ் என்பவரை அந்நாட்டு மாகாண சபை உறுப்பினர்கள் தேர்வு செய்தனர்.
இதையடுத்து ஆஸ்திரேலியா பாராளுமன்ற செனட் உறுப்பினராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் நியமிக்கப்பட்டுள்ளது இதுவே முதன்முறை என கூறப்படுகிறது.
வழக்கறிஞரான வருண் கோஷ், 1980-ம் ஆண்டிலிருந்து ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். தொழிலாளர் கட்சி உறுப்பினராக இருந்து வந்துள்ளார். தற்போது பாராளுமன்ற செனட் சபை உறுப்பினராகியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement