வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மாலே: மாலத்தீவுகளிலிருந்து இந்திய ராணுவ வீரர்கள் மே மாதத்துக்குள் வெளியேற்றப்படுவர் என அந்நாட்டு அதிபர் முகமது முய்சு தெரிவித்துள்ளார்.
மாலத்தீவில், அதிபர் முகமது முய்சு தலைமையில், மக்கள் தேசிய காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இவர் சீன ஆதரவாளர் ஆவர். நம் நாட்டுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ள முகமது முய்சு மீது முக்கிய எதிர்க்கட்சியான, மாலத்தீவு ஜனநாயக கட்சி எதிர்கட்சி கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.
வெளியேற்றப்படுவர்
இந்நிலையில், இன்று (பிப்.,05) அந்நாட்டு பார்லிமென்டில், முகமது முய்சு பேசியதாவது: மாலத்தீவு விவகாரங்களில் தலையிடவோ, அதன் இறையாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தவோ எந்த நாட்டையும் அனுமதிக்க முடியாது. மாலத்தீவின் மூன்று விமான தளங்களில் இந்திய ராணுவ வீரர்கள் உள்ளன.
அவற்றில் ஒரு விமான தளத்தில் உள்ள இந்திய ராணுவ வீரர்கள் மார்ச் 10ம் தேதிக்குள் வெளியேற்றப்படுவர். மற்ற இரண்டு விமான தளங்களில் உள்ள இந்திய ராணுவ வீரர்கள் மே 10ம் தேதிக்குள் வெளியேறிவிடுவார்கள். இதற்கான ஒப்பந்தம் இந்தியா -மாலத்தீவு இடையே மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement