Central government has decided to fence the entire Myanmar border area: Amit Shah | மியான்மர் எல்லை பகுதி முழுவதும் வேலி அமைக்க மத்திய அரசு முடிவு:அமித்ஷா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: 1,643 கி.மீ நீளமுள்ள மியான்மர் எல்லைப்பகுதி முழுவதும் வேலி அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது என மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்து உள்ளார்.

இது குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டு இருப்பதாவது: மியான்மர் நாட்டின் எல்லைப்பகுதியில் இருந்து ஊடுருவலை தடுக்கும் வகையில் அந்நாட்டின் எல்லைப்பகுதி முழுவதும் வேலி அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே மணிப்பூர் மாநிலத்தின் எல்லையை ஒட்டி மோரே பகுதியில் 10 கி.மீ நீளத்திற்கு வேலி அமைக்கப்பட்டுள்ளது. எல்லைப்பகுதி முழுவதும் கண்காணிப்பு பணிகளை எளிதாக்கும் வகையில் ரோந்து பாதையும் அமைக்கப்படுகிறது. வேலி அமைக்கும் பணிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது. விரைவில் அதற்கான பணிகள் துவங்கப்படும். என அமித்ஷா தனது எக்ஸ் வலை தளத்தில் பதிவிட்டு உள்ளார்.

இந்தியர்களுக்கு அறிவுறுத்தல்

மியான்மர் நாட்டின் ராக்கைன் பகுதிக்கு செல்லவேண்டாம் என இந்திய வெளியுறவு துறை தெரிவித்துள்ளது. பாதுகாப்பின்மை மற்றும் உணவுப்பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக, இந்திய வெளியுறவு துறை தெரிவித்துள்ளது. மேலும் ராக்கனை் பகுதிக்கு சென்றுள்ள இந்தியர்கள் விரைவில் இந்தியாவிற்கு திரும்ப வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.