பெங்களூரு : மத்திய அரசு வழங்கிய நிதியை சரியாக பயன்படுத்தவில்லை என்று குற்றஞ்சாட்டி, பெங்களூரில் பா.ஜ.,வினர் இன்று போராட்டம் நடத்த உள்ளனர்.
மத்திய அரசு மாநிலத்திற்குரிய பங்கு நிதியை சரியாக தரப்படவில்லை என்று குற்றஞ்சாட்டி, கர்நாடக காங்கிரஸ் அரசு, புதுடில்லியில் இன்று போராட்டம் நடத்த உள்ளது.
இதற்கிடையில், மத்திய அரசு வழங்கிய நிதியை சரியாக பயன்படுத்தவில்லை என்று குற்றஞ்சாட்டி, பெங்களூரில் பா.ஜ.,வினர் இன்று போராட்டம் நடத்த உள்ளனர்.
கர்நாடக தலைமை செயலகமான விதான் சவுதா வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன், இன்று காலை 11:00 மணிக்கு போராட்டம் நடத்தப்படும் என்று பா.ஜ., தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநில தலைவர் விஜயேந்திரா, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக், சட்ட மேலவை எதிர்க்கட்சி தலைவர் கோட்டா சீனிவாச பூஜாரி உட்பட பா.ஜ., — எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.சி.,க்கள் போராட்டத்தில் பங்கேற்கின்றனர்.
இதற்காக, மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து, அக்கட்சி தலைவர்கள் நேற்றே பெங்களூரு வந்து சேர்ந்தனர். காங்கிரஸ் அரசின் தோல்விகள் குறித்தும், மத்திய அரசு வழங்கிய நிதி விபரம் குறித்தும் பா.ஜ., தலைவர்கள் பட்டியல் தயாரித்துள்ளனர்.
போராட்டத்தின் போது, அரசை குற்றஞ்சாட்டி விளக்க உள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement