குறைந்த வருமானம் பெறும் 50,000குடும்பங்களுக்கு அவர்கள் வசிக்கும் வீடுகளுக்கான பூரண உரிமை வழங்கப்படும்

குறைந்த வருமானம் பெரும் 50,000குடும்பங்களுக்கு அவர்கள் வசிக்கும் வீடுகளுக்கு பூரண உரிமையைப் பெற்றுக்கொடுப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நிதி, பொருளாதார ஸ்தீரத்தன்மை மற்றும் தேசிய கொள்கை அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட யோசனைக்கு அமைவாக நகர வீடமைப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வாடகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள தொடர்மாடி வீடுகளின் உரிமையை உடனடியாக அச்சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கே வழங்குவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பல்வேறு வீடமைப்புத் திட்டங்களின் கீழ் நகர அபிவிருத்தி அதிகாரசபை, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் நகர்ப்புற குடியேற்ற அபிவிருத்தி அதிகாரசபை என்பவற்றினால் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வரியின்றி, தவணைக் கொடுப்பனவு, குத்தகை மற்றும் வாடகை போன்ற அடிப்படைகளின் கீழ் வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.

அதற்கிணங்க மாதாந்தம் 3000/- ரூபா அல்லது அதை விட குறைந்த பெறுமதியிலான வாடகை அடிப்படையில் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சகல நகர வீட்டுத் திட்டங்களில் கட்டணம் அறவிடப்படுவதை நிறுத்துவதற்கும், அவ்வீடுகளில் உரித்தை அக்குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு வழங்குவதற்காக அவசியமான நடவடிக்கை எடுப்பதற்கும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவையினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.