மும்பை: அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சந்தீப் ரெட்டி வங்கா சமீபத்தில் அனிமல் படத்தை இயக்கியிருந்தார். ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் கடுமையான நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றது. ரசிகர்கள் மட்டுமின்றி செலிபிரிட்டிகளும் தங்களது ஆதங்கத்தை கொட்டியிருந்தனர். அந்தவகையில் கங்கனா ரணாவத்தும் கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
