வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வார்சா: ரஷ்யா தாக்குதலில் ஈடுபடுமானால் போலந்து தங்களை தற்காத்துக் கொள்ளத் தயாராக இருப்பதாக ரஷ்யாவை எச்சரித்துள்ளது.
ரஷ்யா – உக்ரைன் போர் நடந்து வரும் சூழலில் வார்சாவை கைப்பற்ற ரஷ்யா நினைத்தால் அதற்கு சரியான பதிலடி கொடுக்கப்படும் என போலந்து பாதுகாப்பு அமைச்சர் கோசினியாக் காமிஸ் கூறியுள்ளார்.
போலந்து பாதுகாப்பு அமைச்சர் கூறியதாவது:
போலந்தின் கிழக்கு எல்லையில் வார்சாவிற்கும் மாஸ்கோவிற்கு இடையில் தற்போது தீவிரமான போர் பதற்றம் நிலவிவருகிறது. இதனால் போலந்து நாட்டின் ராணுவ டாங்கிகள், கவச வாகனங்கள் மற்றும் போர் விமானங்கள் போலந்து வான் பாதுகாப்பை உறுதி செய்துவருகிறன.
தற்போதைய சூழ்நிலையில் நாங்கள் தற்காப்பு நடவடிக்கையாக போருக்கு தயார் நிலையில் இருக்கிறோம். ரஷ்யா உக்ரைனில் வெற்றி பெற்றால் உலக ஜனநாயகத்திற்கு ஒரு பெரும் பிரச்சினையாக இருக்கும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement