'தல தோனி' பெயரை கேட்டாலே சும்மா அதிருதுல – சிஎஸ்கே புதிய ஜெர்ஸி அறிமுக விழாவில் சரவெடி!

Chennai Super Kings: ஐபிஎல் தொடர் (IPL 2024) இன்னும் இரண்டு மாதங்களில் தொடங்க உள்ளதால், அதன் மீதான பேச்சுகள் தற்போதே தொடங்கிவிட்டன எனலாம். அந்த வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீதும் பயங்கர எதிர்பார்ப்பு உள்ளது. நடப்பு சாம்பியனான சிஎஸ்கே இம்முறையும் கோப்பையை வென்றால் ஐபிஎல் வரலாற்றில் 6ஆவது முறையாக கோப்பையை வென்ற அணி என்ற பெருமையை சிஎஸ்கே பெறும். 

அதுமட்டுமின்றி, கேப்டன் தோனியின் (Dhoni) கடைசி சீசனாக இந்த தொடர் இருக்கும் என கூறப்படுகிறது. தோனி சில நாள்களுக்கு முன்னால் ஐபிஎல் தொடருக்கு தயாராகும் வகையில் வலைப்பயிற்சியை தொடங்கியது சிஎஸ்கே ரசிகர்களுக்கு குதூகலத்தை கொடுத்த நிலையில், தோனி நிச்சயம் இந்த தொடர் விளையாடுவார் என கூறப்படுகிறது. போட்டி அட்டவணை இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பதால் முதல் போட்டியில் சென்னை அணி, யாருடன் எங்கு விளையாடும் என்ற எதிர்பார்ப்பு பலரிடம் உள்ளது. 

இப்படி ஐபிஎல் தொடர் மீதும், சென்னை சூப்பர் கிங்ஸ் மீதும் எதிர்பார்ப்பும் விறுவிறுப்பும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களை குதூகலத்தில் ஆழ்த்தும் நிகழ்வும் சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஸ்பான்சர் உடன் வருவதால், அந்த அணியின் புதிய ஜெர்ஸி இன்று அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சி சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு அருகே உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில், சிஎஸ்கே வீரர்களான தீபக் சஹார், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வளைகுடா நாடுகளைச் சேர்ந்த Etihad Airways என விமான சேவை நிறுவனம் சிஎஸ்கே அணியின் அதிகாரப்பூர்வ ஸ்பான்சராக உருவெடுத்துள்ளது.

MS Dhoni’s Jersey for IPL 2024.

– Thala returning soon. pic.twitter.com/iD3fmtJpZg

— Johns. (@CricCrazyJohns) February 8, 2024

அந்த வகையில், சிஎஸ்கேவின் ஜெர்ஸியின் பின்புறத்தில் நம்பருக்கு மேல் அந்நிறுவனத்தின் பெயர் இடம்பெற உள்ளது. குறிப்பாக, சிஎஸ்கேவின் ஜெர்ஸியின் வடிவமைப்பு முழுமையாக மாற இருப்பதாகவும் கூறப்பட்ட நிலையில், புதிய ஜெர்ஸியையும் இன்று அறிமுகப்படுத்தினர். 

இதில், தோனியின் பெயர் கொண்ட ஜெர்ஸியை நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தியபோது, பார்வையாளர்கள் மத்தியில் அமர்ந்திருந்த ரசிகர்கள் கரகோஷம் எழுப்பி, தங்களின் செல்போன்களின் டார்ச்களை எரியவிட்டு தோனி மீதான தங்களின் அபிமானத்தை வெளிப்படுத்தினர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தோனி நேற்று வலைப்பயிற்சியின் போது, அவரது பேட்டின் முன்புறத்தில், அவரது நண்பரின் விளையாட்டு சார்ந்த கடையான Prime Sports என்பதன் பெயர் ஸ்டிக்கரை ஒட்டியிருந்தார். 

இந்த கடையை வைத்துள்ள தோனியின் நண்பர்தான், அவரது வெற்றிகரமான கிரிக்கெட் வாழ்க்கைக்கு ஆரம்பத்தில் உதவியாக இருந்தவர். அந்த நன்றிக்கடனுக்காக தோனி இப்போது பேட்டில் ஸ்டிக்கரை ஒட்டியிருப்பது ரசிகர்கள் மத்தியில் நேற்று முதல் வைரலாகி வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.