புதுடில்லி : தேர்தல் பத்திரங்கள் வாயிலாக, 2022 – 23ம் நிதியாண்டில் மட்டும், மத்தியில் ஆளும் பா.ஜ., 1,300 கோடி ரூபாய் பெற்றுள்ளது. இது, இதே காலகட்டத்தில், காங்கிரஸ் பெற்றதை விட ஏழு மடங்கு அதிகம்.
2022 – 23ம் நிதியாண்டுக்கான ஆண்டு தணிக்கை அறிக்கையை, தலைமை தேர்தல் கமிஷனில் ஆளும் பா.ஜ., சமர்ப்பித்துள்ளது.
அதன்படி, இந்த காலகட்டத்தில், பா.ஜ.,வின் மொத்த பங்களிப்பு 2,120 கோடி ரூபாயாக உள்ளது.
இதில், 61 சதவீதம் அதாவது 1,272 கோடி ரூபாய், தேர்தல் பத்திரங்கள் வாயிலாக பெறப்பட்டதாக அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.
கடந்த 2021 – 22ம் நிதியாண்டில், பா.ஜ.,வின் மொத்த பங்களிப்பு 1,775 கோடி ரூபாயாக இருந்த நிலையில், 2022 – 23ம் நிதியாண்டில் 2,120 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. வருமானம்கடந்த 2021 – -22ம் நிதிஆண்டில், 1,917 கோடி ரூபாயாக
இருந்த கட்சியின் மொத்த வருமானம், மதிப்பீட்டு காலத்தில் 2,360.8 கோடி ரூபாயாக இருப்பதாக பா.ஜ., குறிப்பிட்டுள்ளது.
மற்றொரு தேசிய கட்சியான காங்., 2022 – 23ம் நிதியாண்டில், தேர்தல் பத்திரங்கள் வாயிலாக 171 கோடி ரூபாய் பெற்றுஉள்ளது. கடந்த 2021 – 22ம் நிதியாண்டில், 236 கோடி ரூபாய் பெறப்பட்ட நிலையில், காங்கிரசின் வருமானம் குறைந்துள்ளது.
மாநில கட்சிகளை பொறுத்தவரை, ஆந்திர சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், 2022 – 23ம் நிதியாண்டில், தேர்தல் பத்திரங்கள் வாயிலாக 34 கோடி ரூபாய் பெற்றுள்ளது. தமிழகத்தில் ஆளும் தி.மு.க., உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் ஆண்டு தணிக்கை விபரங்கள் வெளியாகவில்லை.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement