
அஞ்சாதே நடிகர் மூச்சு திணறலால் காலமானார்
அஞ்சாதே உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த ஸ்ரீதர் என்ற துணை நடிகர் மூச்சு திணறல் காரணமாக காலமானார். இவர் மிஸ்கின் இயக்கத்தில் வெளியான அஞ்சாதே திரைப்படத்தில் கால் ஊனமுற்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் தன் மகன் கண் முன் போலீசாரால் சுட்டுக் கொல்லப்படும் கதாபாத்திரத்தில் மிக எதார்த்தமாக நடித்திருந்தார்.
அது தவிர முதல்வன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். இவருக்கு கடந்த ஒரு வாரமாக இருமல் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் இன்று (பிப்.,10) அதிகாலை 01.30 மணி அளவில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு காலமானார். இவர் புதிய திரைப்படம் ஒன்றை இயக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.