கூகுளின் இலவச AI ஆப் வந்தாச்சு..! பயன்படுத்துவது எப்படி?

உலகின் மிகப்பெரிய இண்டெர்ட் நிறுவனமான கூகிள் இப்போது ஏஐ தொழில்நுட்பத்தில் புதிய டிரெண்டிங்கை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. சாட்ஜிபிடிக்கு பிறகு தன்னுடைய ஏஐ தொழில்நுட்பத்தை Google Bard என அறிமுகப்படுத்தினாலும், அதில் அடுத்தடுத்த அப்டேட்டுகளை கொண்டு வந்து இப்போது புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியுள்ளது. முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட Google bard AI-ன் பெயரை இப்போது Gemini AI என பெயர் மாற்றம் செய்துள்ளது. இதில் அடுத்த அப்டேட்டான ஜெமினி அட்வான்ஸையும் யூசர்களுக்கு சந்தா வடிவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது கூகுள் நிறுவனத்தின் புதிய அல்ட்ரா 1.0 எல்எல்எம் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பரில் கூகுள் தனது ஜெமினி AI மாடலை அறிமுகப்படுத்தியது. அப்போது, அதன் மூன்று பதிப்புகளான நானோ, ப்ரோ மற்றும் அல்ட்ராவை அறிமுகப்படுத்தியது. இவற்றில் சக்திவாய்ந்த அல்ட்ரா மாடல் பின்னர் திடீரென நிறுத்தியது கூகுள். ChatGPT சாட்போட்டுடன் போட்டியிடும் வகையிலேயே கூகுள் தன்னுடைய ஏஐ மாடல்களில் மாற்றத்தை கொண்டு வந்து கொண்டே இருக்கிறது. முதலில் அதிக யூசர்களைக் கொண்டிருந்த சாட்ஜிபிடி இப்போது கூகுளுடன் ஒப்பிடும்போது பின்தங்கியிருக்கிறது. 

கூகுளின் திட்டம்

கூகிள் நீண்ட காலமாக பார்டை பெயர் மாற்றம் செய்ய திட்டமிட்டு இருந்தது. டெவலப்பர் டிலான் ரஸ்ஸல் இந்த மாற்றம் தொடர்பான தகவல்களை ஏற்கனவே தன்னுடைய X பிளாட்பார்மில் பகிர்ந்திருந்தார். கூடவே செயலி அறிமுகப்படுத்தப்படும் என்ற தகவலையும் முன்கூட்டியே தெரிவித்திருந்தார். அவர் தெரிவித்தது போலவே கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு மற்றும் iOS இரண்டிலும் புதிய ஜெமினி செயலியை கொண்டு வந்துள்ளது. 

பயனர்கள் இந்த செயலியை பதிவிறக்கிய பிறகு, கூகிள் அஸிட்டென்ட் உதவியுடன் ஜெமினியுடன் இணைக்கலாம். ஜெம்னினி செயலியை பதிவிறக்கிய பிறகு, யூசர்கள் கூகுள் அசிஸ்டண்ட் தற்போது அணுகக்கூடிய அதே வழியில் அதை அணுகுவதற்கான ஆப்சனைப் பெறுவார்கள். பவர் பட்டனை அழுத்தி, மூலையில் இருந்து ஸ்வைப் செய்து, ‘Ok Google’ என்று கூறுவதன் மூலமும் பயனர்கள் அதை அணுக முடியும்.

ஜெமினி அட்வான்ஸ்டு அறிமுகம்

ஜெமினி தவிர, ஜெமினி அட்வான்ஸ்டையும் நிறுவனம் கொண்டு வந்துள்ளது. இதனை பயன்படுத்த வேண்டும் என்றால் யூசர்கள் சந்தா செலுத்த வேண்டும். இதனை கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் Google One AI -ன் பிரீமியம் திட்டத்தைப் பெற்ற பயனர்கள் கூடுதல் கட்டணம் எதுவும் இல்லாமல் இரண்டு மாதங்களுக்கு ஜெமினி அட்வான்ஸ்டைப் பயன்படுத்த முடியும். பிரீமியம் AI திட்டம் Google One சேவையை அடிப்படையாகக் கொண்டது. அதன் இலவச சோதனைக் காலம் முடிந்த பிறகு, பயனர்கள் மாதத்திற்கு ரூ.1,950 செலுத்த வேண்டும்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.