வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
அபுதாபி : ஐக்கிய அரபு எமிரேட்சில், கேரளாவைச் சேர்ந்த ஒருவருக்கு இலவசமாக கிடைத்த லாட்டரியில், 33 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது.
கேரளாவைச் சேர்ந்த ராஜிவ் அரிகட், 40, மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் அபுதாபியில் கட்டடக்கலை நிபுணராக பணியாற்றி வருகிறார்.
கடந்த 10 ஆண்டுகளாக குடும்பத்துடன் அபுதாபியில் வசித்து வரும் இவர், அங்கு விற்பனையாகும் லாட்டரி சீட்டுகளை வாங்கும் வழக்கம் உள்ளது.
இந்நிலையில், அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் விற்பனை செய்யப்பட்ட, ‘பிக் டிக்கெட் அபுதாபி’ எனும் லாட்டரிச் சீட்டை வாங்க, ராஜிவ் மற்றும் அவரது அலுவலகத்தில் பணியாற்றும் இந்திய ஊழியர்கள் முடிவு செய்தனர்.
கடந்த வாரம் இவர் உட்பட நிறுவனத்தில் பணியாற்றும் 19 பேர் இணைந்து, வாராந்திர லாட்டரி சீட்டுகள் இரண்டை வாங்கினர். அதற்கு இலவசமாக நான்கு சீட்டுகள் கிடைத்தன.
கடந்த பிப்., 5ம் தேதி இந்த லாட்டரிக்கான குலுக்கல் நடைபெற்றது. அதில், ராஜிவ் பெற்ற இலவச லாட்டரி சீட்டுக்கு 33 கோடி ரூபாய் பரிசு கிடைத்தது.
இது குறித்து ராஜிவ் கூறியதாவது:
கடந்த மூன்று ஆண்டுகளாக அபுதாபியில் லாட்டரி சீட்டுகளை வாங்குகிறேன். ஒவ்வொரு முறை லாட்டரி சீட்டு வாங்கும் போதும் பரிசு கிடைத்துவிடும் என நினைப்பேன். அது இந்த முறை நனவாகி உள்ளது.
அலுவலகத்தில் 30,000 ரூபாய் சம்பளத்தில் உள்ள உதவியாளர் உள்ளிட்ட சாதாரண பணியாளர்களுடன் சேர்ந்து, இந்த லாட்டரி சீட்டுகளை பெற்றோம். இந்த பரிசுத் தொகையை 19 பேரும் சமமாக பகிர்ந்து கொள்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement