பெங்களூரு : ”நில சீர்திருத்த சட்டம் – 2020 ல் திருத்தம் செய்ய விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். விரைவில் இச்சட்டம் திருத்தப்படும்,” என முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று மாநில விவசாயிகள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியை முதல்வர் சித்தராமையா துவக்கி வைத்து பேசியதாவது:
ஏ.பி.எம்.சி., எனும் வேளாண் விளைபொருள் சந்தை குழு சட்டம் திருத்தப்படும். இதற்கு ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டதால், காலதாமதம் ஆகிறது. குழுவின் அறிக்கைக்கு பின், இரு அவைகளிலும் மீண்டும் மசோதா தாக்கல் செய்யப்படும்.
விவசாயிகளின் மகன்களுக்கு திருமணத்துக்கு, மணப்பெண் கிடைக்கவில்லை என்று விவசாய தலைவர்கள் கவன ஈர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அடிப்படையில், நாம் அனைவரும் விவசாயிகளின் குழந்தைகள். விவசாயத்தை லாபகரமாக மாற்றினால், விவசாயிகள் சந்திக்கும் சில பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும். பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ஆதரவான திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
விவசாயத்தை சார்ந்து இருப்பவர்களின் எண்ணிக்கை, 80 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாக குறைந்து உள்ளது. விவசாய துறைக்கு மேலுக்கும் ஊக்கம் அளிப்பது அவசியம்.
நில சீர்திருத்த சட்டம் – 2020 ல் திருத்தம் செய்ய விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். விரைவில் இச்சட்டம் திருத்தப்படும்.
இவ்வாறு அவர்பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement