சென்னை: நடிகர் கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் கூட்டணியில் 30 ஆண்டுகளுக்கு முன்னதாக வெளியான நாயகன் படம் மிகப்பெரிய அளவில் வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது. அந்த படத்தை தொடர்ந்து தற்போது இந்த கூட்டணி மீண்டும் தக் லைஃப் படத்திற்காக இணைந்துள்ளது. படத்தில் மேலும் த்ரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான், ஜோஜூ ஜார்ஜ், கௌதம் கார்த்திக் உள்ளிட்டவர்களும் இணைந்துள்ளனர்.
