பெங்களூரு : மகதாயி திட்டத்துக்கு, மத்திய வன விலங்குகள் வாரியம் அனுமதி மறுத்துள்ளது. இதனால் கர்நாடக அரசு அதிருப்தி அடைந்துள்ளது.
இதுதொடர்பாக, முதல்வர் சித்தராமையா கூறியதாவது:
ஹூப்பள்ளி – தார்வாட் சுற்றுப்பகுதி மற்றும் கிராமங்களுக்கு, குடிநீர் வினியோகிக்கும் மகதாயி திட்டத்துக்கு, தேசிய வனவிலங்குகள் வாரியம், மீண்டும் அனுமதி நிராகரித்துள்ளது. மத்திய வனம், சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்திர யாதவ் தலைமையில் நடந்த கூட்டத்தில், மகதாயி திட்டத்துக்கு அனுமதி அளிக்க வேண்டாம் என, முடிவு செய்யப்பட்டுள்ளது.
வறட்சி நிவாரணம் கேட்டு, நான்கு மாதங்களாகின்றன. மத்திய வல்லுனர் கமிட்டி, மாநிலத்துக்கு வந்து ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. விதிகளின்படி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் உயர் அதிகார கமிட்டி கூட்டம் நடத்தி, வல்லுனர் அறிக்கையை ஆய்வு செய்து, நிவாரணம் வழங்க அனுமதி அளிக்க வேண்டும்.
இந்த கூட்டம் நடத்த அவருக்கு நேரம் இல்லை. எப்போது வறட்சி நிவாரணம் வழங்குவர். ஏழைகளின் பசியை போக்கும், ‘அன்னபாக்யா’ திட்டத்துக்கு, மத்திய அரசு முட்டுக்கட்டை போடுகிறது. இத்திட்டத்துக்கு, தேவையான அரிசியை கிலோவுக்கு 33 ரூபாய் கொடுத்து கொள்முதல் செய்கிறோம். இதே அரிசியை, ‘பாரத் பிராண்ட்’ என்ற பெயரில், ஒரு கிலோவுக்கு 29 ரூபாய் வீதம் விற்கப்படுகிறது.
இவ்வாறு அவர்கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement