காதலர் தினம் வந்துவிட்டதால், இளைஞர்கள் காதலிக்கு சர்பிரைஸாக ஸ்மார்ட்போன் பரிசளிக்க திட்டம் போட்டிருப்பார்கள். காதலியும் காதலருக்கு ஸ்மார்ட்போன் ஒன்றை சர்பிரைஸாக கொடுக்க நினைத்திருப்பார்கள். அதற்காக மொபைல் தேடுபவர்கள் என்றால் 10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான விலையில் கேமரா, நல்ல ரேம், பேட்டரி குவாலிட்டி, டிஸ்பிளே தரத்துடன் இருக்கும் மொபைல்கள் என்னென்ன என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். எல்லா மொபைல்களுக்கும் ஒரு சில நல்ல அம்சங்கள், கெட்ட அம்சங்கள் இருக்கும். அதில் உங்களுக்கு உகந்ததை தேர்ந்தெடுப்பது சிறந்தது.
1. Redmi 13C 5G
Redmi 13C 5G மொபைல் Startrail Green மாடலில் சூப்பர் டிசைன் மற்றும் பக்கவான தொழில்நுட்ப அம்சங்கள் கொண்ட மொபைலாக இருக்கிறது. MediaTek Dimensity 6100+ 5G SoC மற்றும் 4GB RAM இருக்கும் இந்த மொபைலில் மல்டி டாஸ்கிங் செய்ய ஏற்றது. 6.74-இன்ச் HD+ 90Hz டிஸ்ப்ளே கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 இருப்பதால் காட்சிகள் சிறப்பாக இருக்கும். 50MP, AI அம்சம் கொண்ட டூயல் பின்பக்க கேமரா உங்களை பிரமிக்க வைக்கும். புகைப்படங்கள் எடுக்க சிறந்தது. 5000mAh பேட்டரி இருந்தாலும் அதிக நேரம் கேம் விளையாட முடியாது.
2. realme narzo N53
Realme narzo N53 ஸ்மார்ட்போன் Feather Black வடிவமைப்பில் ஜொலிக்கிறது. இது 8GB+128GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் மற்றும் ரேம் கொண்ட இந்த மொபைலில் 33W SUPERVOOC சார்ஜிங் இருப்பதால், மொபைலை சார்ஜ் செய்ய அதிக நேரம் காத்திருக்க தேவையில்லை. 7.49mm பாடி இருப்பதால் ஸ்லிம்மாகவும், ஹேண்டில் செய்ய இலகுவான மொபைலாகவும் இது இருக்கும். இந்த மொபைலிலும் 50MP, AI அம்சம் கொண்ட பின்பக்க கேமரா இருக்கிறது. புகைப்படம் எடுக்க பக்கவான கேமரா. 5000mAh பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன்.
3. Redmi A2
சீ கிரீனில் உள்ள ரெட்மி ஏ2, குறைந்த விலையில் இருக்கும் சூப்பர் செயல் திறனுக்கான மொபைல். MediaTek Helio G36 செயலி மூலம் இயக்கப்படுகிறது. 4ஜிபி ரேம் (2ஜிபி விர்ச்சுவல் ரேம் உட்பட) கொண்ட இந்த மொபைல், மல்டி டாஸ்கிங் செய்ய ஏற்ற தரமான மொபைல். 6.5 செமீ HD+ டிஸ்ப்ளே தெளிவான மற்றும் துடிப்பான காட்சிகளை வழங்குகிறது. 8MP இரட்டை கேமரா மூலம் நல்ல புகைப்படங்களை எடுக்கலாம். 5000mAh பேட்டரி உள்ளது.
4. Redmi 12C
Redmi 12C ஸ்மார்ட்போன் டிசைன் மற்றும் அதன் செயல்திறனுக்கு பெயர் பெற்றுள்ளது. இதில் மீடியாடெக் ஹீலியோ ஜி85 செயலி இருப்பதால் மல்டி டாஸ்கிங் செய்பவர்களுக்கு ஏற்ற மொபைல். 6ஜிபி ரேம் (பிளஸ் 5ஜிபி விர்ச்சுவல் ரேம்) அமைப்பைக் கொண்டுள்ளது. 17cm HD+ டிஸ்ப்ளே கண்களுக்கு விருந்து. கீறல்-எதிர்ப்பு கண்ணாடி இருப்பதால் படங்கள், புகைப்படங்களை எல்லாம் தெளிவாக காட்டும். இந்த மொபைலிலும் 50MP, AI அம்சம் கொண்ட டூயல் கேமரா அமைப்பு இருப்பதால் தரமான புகைப்படம் எடுக்கலாம். இதிலும் 5000mAh பேட்டரி இருக்கிறது.
5. Samsung Galaxy M04
சாம்சங் கேலக்ஸி எம்04, லைட் கிரீன் நிறத்தில் இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மலிவு விலையில் இருக்கும் சூப்பரான போன். MediaTek Helio P35 Octa-core செயலி இருக்கும் இந்த மொபைல், ஆப் உபயோகத்தில் சீரான செயல்பாட்டை கொடுக்கும். 4ஜிபி ரேம், ரேம் பிளஸ் மூலம் 8ஜிபி வரை விரிவாக்கக்கூடியது. இந்த மொபைலில் இருக்கும் இரட்டை கேமரா செட்டிங்ஸ், தரமான புகைப்படங்களை எடுப்பதை உறுதி செய்கிறது. அதேநேரத்தில், குறைந்த வெளிச்சத்தில் எதிர்பார்க்கும் செட்டிங்ஸில் புகைப்படம் எடுக்கும்போது தெளிவு கிடைக்காது. தரமான 5000 mAh பேட்டரி உள்ளது.
6. POCO C51
POCO C51, ராயல் ப்ளூவில் இருக்கும் இந்த ஸ்மார்ட்போன், MediaTek G36 octa-core CPU ஆல் இயக்கப்படுகிறது. 11GB வரை ரேம் (5GB விர்ச்சுவல் விரிவாக்கம்) மற்றும் 6.52-இன்ச் HD+ டிஸ்ப்ளே இந்த ஸ்மார்ட்போனில் இருக்கும். 8MP, AI அம்சன் கொண்ட இரட்டை கேமரா செட்டிங்ஸ் மூலம் சூப்பராக புகைப்படங்களை பிடிக்கலாம். 5000mAh பேட்டரி நீடித்த நிலைத்த செயல்பாட்டுக்கு உதவியாக இருக்கும்.
பணத்திற்கு ஏற்ற மொபைல்:
Redmi A2 பணத்திற்கான சிறந்த மதிப்பாக தனித்து நிற்கிறது, அதன் MediaTek Helio G36 செயலி மற்றும் அடிப்படைத் தேவைகளுக்கான ஒழுக்கமான டிஸ்ப்ளே மற்றும் கேமரா அமைப்புடன் உறுதியான செயல்திறனை வழங்குகிறது.
எல்லா அம்சங்களும் இருக்கும் மொபைல்:
Realme narzo N53 ஆனது 8GB RAM மற்றும் 128GB சேமிப்பகம், வேகமான சார்ஜிங் மற்றும் உயர்-தெளிவுத்திறன் கொண்ட கேமரா ஆகியவற்றுடன் கூடிய பவர்புல் செயல்திறன் கொண்ட ஒரு சூப்பர் மொபைல். எல்லா வேலைகளுக்கும் ஏற்ற மொபைல் என இதனை சொல்ல முடியும்.
மேலே சொல்லப்பட்டிருக்கும் மொபைல்கள் அனைத்து 10 ஆயிரம் ரூபாய் என்ற பட்ஜெட் விலையில் வாங்க கூடிய மொபைல்கள் ஆகும். மார்க்கெட்டில் இந்த மொபைல்களுக்கான விலையில் ஏற்ற, இறக்கம் இருக்கலாம் என்பதால் அதனை கருத்தில் கொண்டு உங்களுக்கு ஏற்ற மொபைல்களை வாங்குங்கள்.