டெல்லி நோக்கி விவசாயிகள் படையெடுப்பதை தடுக்க ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநில எல்லையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தவிர, 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளதை அடுத்து ஊர்வலம் மற்றும் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லி எல்லையை ஒட்டிய ஹரியானா மாநிலத்தின் ஆறு மாவட்டங்களில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்ட நிலையில் டெல்லி நோக்கி விவசாயிகள் அணிவகுப்பதை தடுக்க மாநில காவல்துறை தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது. டெல்லி நோக்கி பேரணி செல்லவுள்ள 70 க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களின் […]