மக்களவைத் தேர்தல் பணிகளை இருந்து ஒருங்கிணைக்க திமுக தலைமை அலுவலகத்திலும், மாவட்டந்தோறும் ‘வார் ரூம்’ அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, தொகுதி பார்வையாளர்கள் ஒருங்கிணைப்பு, பூத் கமிட்டி, பரப்புரை மேற்பார்வை ஆகியவற்றை ஒருங்கிணைக்க திமுக இணை அமைப்பு செயலாளர் அன்பகம் கலை நியமிக்கப்பட்டுள்ளார்.
ஊடக விவாதக் குழு, நட்சத்திர பேச்சாளர்கள் பரப்புரை போன்ற பணிகளை மேற்கொள்ள திமுக துணை அமைப்பு செயலாளர் ஆஸ்டின், சட்டக்குழு மற்றும் தேர்தல் ஆணையம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.
இளங்கோ எம்.பி. ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், தேர்தல் வழக்குகளுக்கான நீதிமன்ற குழுவில் வழக்கறிஞர்கள் ஆர்.சண்முகசுந்தரம், ஆர். விடுதலை, பி. வில்சன், தலைமை கழக ஒருங்கிணைப்பாளர்களாக துறைமுகம் காஜா, பூச்சி முருகன் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
சட்டப்பூர்வ அனுமதிகளுக்கான குழுவில் வழக்கறிஞர்கள் அ.சரவணன், ஜெ.பச்சையப்பன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். காவல் துறை புகார்கள் மற்றும் பாதுகாப்பு குழுவில் வழக்கறிஞர்கள் அஸ்வின் பிரசன்னா, அர்ஜுன் ஆகியோரும், மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் குழுவில் வழக்கறிஞர்கள் இ.பரந்தாமன், கே.எஸ்.ரவிச்சந்திரன், கரூர் மணிராஜ், ஈரோடு ராதாகிருஷ்ணன், கே.சந்துரு, சூர்யா வெற்றி கொண்டான் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.