பழைய போனை அதிக விலைக்கு விற்பனை செய்ய வேண்டுமா? இந்த தவறுகளை செய்யாதீர்கள்..!

பழையபோன்களை நீங்கள் மார்க்கெட்டில் விற்பனை செய்யும்போது அதற்கு நல்ல தொகையை பெற விரும்பினால், போனை விற்கும் போது சில தவறுகள் செய்வதை தவிர்க்க வேண்டும். பெரும்பாலான மக்கள் தங்கள் பழைய ஸ்மார்ட்போன்களை விற்கும்போது சில தவறுகள் செய்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். இதன் காரணமாக அந்த மொபைலை வாங்குபவர்,  விற்பனை செய்ய விரும்புவர் எதிர்பார்க்கும் தொகையை விட குறைந்த விலையையே கொடுக்கிறார். அப்படியான நிலை உங்களுக்கு வராமல் எதிர்பார்க்கும் தொகை வேண்டும் என நீங்கள் நினைத்தால் இந்த அடிப்படையான தவறுகளை சரி செய்து கொள்ளுங்கள். 

பழைய போன் விற்பனை செய்யும்போது செய்யக்கூடாத தவறுகள்: 

1. தொலைபேசியை சுத்தம் செய்ய வேண்டும்:

தொலைபேசியை விற்கும் முன், அதை நன்றாக சுத்தம் செய்யுங்கள். ஸ்மார்ட்போனின் உட்புறத்தையும் வெளிப்புறத்தையும் சுத்தம் செய்யவும். தொலைபேசியில் உள்ள உங்கள் தொடர்பான எல்லா டேட்டாக்களையும் நீக்கிவிடுங்கள்.

2. தொலைபேசி முழு தகவல்:

போனின் முழு விவரங்களையும் வாங்குபவரிடம் சொல்லுங்கள். தொலைபேசியின் மாதிரி எண், விவரக்குறிப்பு மற்றும் நிலை ஆகியவற்றைக் குறிப்பிடவும். தொலைபேசியில் ஏதேனும் தவறு அல்லது பிரச்சனை இருந்தால், அவருக்கு கட்டாயம் தெரிவிக்கவும்.

3. ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள்:

நீங்கள் விற்பனை செய்ய விரும்பும் மொபைலை வேறொரு நல்ல கேமரா இருக்கும் மொபைலை பயன்படுத்தி தரமான புகைப்படங்களாக எடுக்க வேண்டும். மொபைலை வெவ்வேறு கோணங்களில் புகைப்படம் எடுங்கள். மொபைலில் ஏதேனும் குறைபாடு அல்லது சேதம் இருந்தால், அதையும் படம் எடுக்கவும்.

4. நியாயமான விலை நிர்ணயம்:

ஸ்மார்ட்போனின் விலையை நியாயமானதாக நிர்ணயம் செய்யுங்கள். சந்தையில் இதே போன்ற போன்கள் என்ன விலைக்கு விற்பனையாகிறது என்பதை தெரிந்து கொண்டு அதற்கேற்ப உங்கள் மொபைலின் விலையை திட்டமிடவும். சீக்கிரம் விற்க வேண்டும் என நினைத்தால் விலையை குறைப்பது மட்டுமே விரைவான விற்பனைக்கு வழிவகுக்கும். 

5. தவறான இடத்தில் போனை விற்பது:

நீங்கள் தொலைபேசியை ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் விற்கலாம். ஆன்லைனில் விற்க, OLX, Quikr அல்லது eBay போன்ற இணையதளங்களைப் பயன்படுத்தலாம். ஆஃப்லைனில் விற்க, உங்கள் பகுதியில் இருக்கும் மொபைல் கடைகளுக்கு செல்லுங்கள். தொலைபேசியை விற்க சரியான இடத்தை தேர்வு செய்வது, உங்களுக்கு நல்ல தொகை கிடைப்பதை உறுதி செய்யும். 

6. மொபைலை பயன்படுத்த அனுமதி:

வாங்குபவர்கள் உங்கள் மொபைலை பயன்படுத்த அனுமதியுங்கள். அவர்கள் உங்கள் மொபைலை ஆய்வு செய்து அவர்கள் எதிர்பார்க்கும் அம்சங்கள் இருந்தால் கட்டாயம் வாங்கிக் கொள்வார்கள். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு மழுப்பலாக பதில் கொடுக்காமல் நேர்மையாகவும், யோசிக்காமல் உடனுக்குடனும் பதில் கொடுங்கள். அப்போது தான் நீங்கள் சொல்லும் தகவலின் மீது அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படும். 

7. மொபைல் போனுக்கான உபகரணங்கள் வழங்குதல்

நீங்கள் விற்பனை செய்யும் மொபைல்களுக்கான அனைத்து உபகரணங்களையும் கொடுக்க வேண்டும்.  உதாரணமாக, சார்ஜர்கள், ஹெட்ஃபோன்கள் மற்றும் மெமரி கார்டுகள் உள்ளிட்டவற்றை வாங்குபவருக்கு கொடுக்க வேண்டும். இல்லையென்றால் அதற்கேற்ப மொபைலின் விலையில் குறைப்பார்கள். மேலும், மொபைலுக்கு கேரண்டி கார்டு இருந்தால் அதனை கொடுத்துவிடுங்கள். இதன் மூலம் கணிசமான தொகையை உயர்த்திக் கொள்ள உங்களுக்கு வாய்ப்பு இருக்கிறது. 

8. அன்பான அணுகுமுறை

மொபைல் வாங்குபவரிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். உங்கள் பேச்சில் கனிவு இருந்தால் வாங்குபவருக்கு நம்பிக்கை ஏற்படும். அதேபோல் போன் டெலிவரி உடனடியாக இருக்க வேண்டும். பணத்தை பெற்றுக் கொள்ளாமல் யாருக்கும் மொபைலை கொடுக்க வேண்டாம். பணம் வங்கிய உடன் இனி மொபைலுக்கு இனி எந்தவகையிலும் தான் பொறுப்பில்லை என்பதை உறுதியாக தெரிவித்துவிடுங்கள். ஏனென்றால் சில நாட்கள் பயன்படுத்திவிட்டு மொபைலை திருப்பி கொடுக்க வருவதை தவிர்க்க இந்த நிலைப்பாடு உங்களுக்கு உதவும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.