வேலையில்லாமல் இருந்து மீண்டும் வேலைக்குச் செல்கிறேன் – சமந்தா

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா தற்போது ஹிந்தி வரையிலும் சென்றுவிட்டார். தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டதால் அதற்காக சிகிச்சை மேற்கொள்ள சினிமாவை விட்டு கொஞ்ச காலம் ஒதுங்கியிருந்தார். இடையில் சில சுற்றுப்பயணங்களையும் மேற்கொண்டார். அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் அப்டேட் கொடுக்கும் சமந்தா தற்போது மகிழ்ச்சியுடன் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

அதில், “கடைசியாக, நான் மீண்டும் வேலைக்குச் செல்கிறேன். கடந்த சில காலமாக முழுமையாக வேலையில்லாமல் இருந்தேன். ஆனால், இப்போது பிரண்ட் உடன் ஒரு ஜாலியான விஷயம் ஒன்றைச் செய்திருக்கிறேன், அது 'ஹெல்த் 'போட்காஸ்ட்'. இது எதிர்பாரா ஒன்று, ஆனால், உண்மையாக எனக்குப் பிடித்தமானது. மிகவும் உணர்ச்சிமிக்க ஒன்று. அடுத்த வாரம் அது ரிலீஸ் ஆகிறது. உங்களில் சிலருக்கு இது நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன். இதை உருவாக்கியதில் எனக்கு மகிழ்ச்சி,” எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.