கொல்கத்தா ஆறு பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் மேற்கு வங்க சட்டசபையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஷேக் ஷாஜகான் மற்றும் அவரது கும்பல் மேற்கு வங்காளம் மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காலியில் பலாத்காரமாக நிலத்தைக் கைப்பற்றியதாகவும், பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவதாகவும் குற்றம் சாட்டி, ஏராளமான பெண்கள் கடந்த சில நாட்களாகப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர் ரேஷன் பொருட்கள் விநியோகத்தில் ஊழல் செய்ததாக அவரது வீட்டில் சோதனை நடத்தச்சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒரு கும்பலால் தாக்கப்பட்டனர். கடந்த மாதம் முதல் ஷாஜகான் தலைமறைவாக உள்ளார். […]
