Liquor policy case: Manish Sisodia granted interim bail | மதுபான கொள்கை வழக்கு: மணீஷ் சிசோடியாவுக்கு இடைக்கால ஜாமீன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: மதுபான கொள்கை வழக்கில் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு இடைக்கால வழங்கி டில்லி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

டில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சியில் 2021-22-ம் ஆண்டில் புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கினை அமலாக்கதுறை சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதில் நடந்த பணமோசடி குறித்த வழக்கில் டில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கடந்தாண்டு மார்ச்சில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

தனது உறவினர் திருமணத்தில் கலந்து கொள்ள கோரி டில்லி சிறப்பு கோர்ட்டில் ஜாமின் மனு செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி பிப்.13 முதல் 15-ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். முன்னதாக அமலாக்கத்துறை அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்திருந்தநிலையில் மணிஷ் சிசோடியாவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.