சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்து பத்து ஆண்டுகளை கடந்து சினிமாவில் நடித்து வருகிறார். கடந்த 2012ம் ஆண்டில் இவரது மெரினா படம் வெளியானது. சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு தாவியவர்களின் இவர் முக்கியமானவராக பார்க்கப்படுகிறார். தன்னுடைய கடுமையான உழைப்பு மற்றும் அடுத்தடுத்த சரியான திட்டமிடல்கள் மூலமாக சிறப்பான நடிகராகவும் தயாரிப்பாளராகவும் சிவகார்த்திகேயன் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
