விருதுநகர்: பல்கலைக்கழக விடுதி அறைகளில் மாணவன், மாணவி தூக்கிட்டு தற்கொலை – போலீஸார் விசாரணை!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன்கோயில் பகுதியில் உள்ள கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடக உள்ளிட்ட வெளிமாநில மாணவ – மாணவிகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், அப்பல்கலைக்கழகத்தில் விடுதிகளில் மாணவர்கள் இருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸிடம் விசாரித்தோம். அதன்படி கிடைத்த முதற்கட்ட தகவலின்படி, ஆந்திர மாநிலம் ஆனந்தபூர் மாவட்டம் நரசாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மஞ்சுநாத்(வயது 20), கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் உள்ள விடுதியில் தங்கி பி.டெக் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

மாணவர்கள்

இந்நிலையில் மஞ்சுநாத், சில தனிப்பட்ட காரணங்களால் மன அழுத்தத்தில் தவித்து வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் தற்கொலை செய்துக்கொள்ள முடிவெடுத்த அவர், கல்லூரி பருவ விடுமுறை முடிந்து ஊரில் இருந்து திரும்புவதற்கு முன்னரே ஆன்லைனில் கயிறு ஆர்டர் செய்து வாங்கி இருக்கிறார். பின்னர் மஞ்சுநாத், கல்லூரிக்கு திரும்பிய நிலையில் விடுதி அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்திய நிலையில், அதே கல்லூரியில் படித்து வந்த மாணவி ஒருவரும் தனது விடுதி அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதன்படி, கலசலிங்கம் பல்கலைக்கழக விடுதியில் தங்கி பி.டெக் 2-ம் ஆண்டு படித்துவரும், ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் வடிகபள்ளி கிராமத்தைச் சேர்ந்த அகிலா(வயது 19) என்பவர் , தீராத வயிற்றுவலி காரணமாக விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்து வந்த கிருஷ்ணன் கோயில் போலீஸார் தற்கொலை செய்துக்கொண்ட மாணவர்கள் இருவரின் உடல்களையும் மீட்டு உடற்கூராய்வுக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலை தடுப்பு மையம்

மேலும் இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணன்கோயில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஒரே கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் இரண்டுபேர் அவரவர் தங்கி வந்த விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மாணவர்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.