இலங்கை அணிக்கும் ஆப்கானிஸ்தான் அணிக்கும் இடம்பெறும் மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று (14) நடைபெறவுள்ளது.
இச்சுற்று இன்று பி.ப 02.30 மணிக்கு பல்லேகெல விளையாட்டு மைதானத்தில் இரவு பகல் போட்டியாக இடம்பெறவுள்ளது.
போட்டியில் இன்னும் ஒரு போட்டி எஞ்சியிருக்கும் நிலையில் 2-0 என்ற அளவில் வெற்றியீட்டியுள்ள இலங்கை அணி, இன்றைய போட்டியிலும் வெற்றி பெற்று முழு போட்டியிலும் வெற்றி பெறும் நம்பிக்கையில் உள்ளது.