Dutch ex-prime minister couple who died by mercy killing | கருணை கொலை மூலம் அன்பு மனைவியுடன் மரணித்த நெதர்லாந்து மாஜி பிரதமர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

ஆம்ஸ்டர்டாம்: தங்களை கருணை கொலை செய்யுமாறு விடுத்த கோரிக்கையை ஏற்று நெதர்லாந்து முன்னாள் பிரதமர் தன் மனைவியுடன் கை கோர்த்தபடி மரணித்த சம்பவம் நடந்துள்ளது.

தீராத நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒருவரை மருத்துவ உபகரணங்கள் உதவியுடன் வாழச் செய்வதை தவிர்த்து கண்ணியமாக மரணிக்க செய்வதை பல்வேறு நாடுகளும் அனுமதித்து உள்ளது.இந்நிலையில் உலகில் முதன்முறையாக 2002ம் ஆண்டு கருணை கொலைக்கு நெதர்லாந்து நாடு சட்டபூர்வ அங்கீகாரம் வழங்கியது.

இதையடுத்து அந்நாட்டின் முன்னாள் பிரதமரும் கிறிஸ்டியன் ஜனநாயக அப்பீல் கட்சியின் தலைவரான டிரைஸ்-வான்-ஆகட் 94, இவர் 1977-ம் ஆண்டு முதல் 1982 ம் ஆண்டு வரை அந்நாட்டின் பிரதமராக இருந்தார். இவரது மனைவி இகுனி 93 இவரும் கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக இணைபிரியாத தம்பதிகளாக வாழ்ந்து வந்தனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு டிரைஸ்வான் ஆகட்டிற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு படுத்த படுக்கையானார். இதனை பார்த்து மனவேதனை அடைந்த இகுனி, நெதர்லாந்து சட்டப்படி தங்களை கருணை கொலை செய்யுமாறு கோரிக்கைவிடுத்தார்.
இதனை ஏற்று அரசு சட்டவிதிகளின் கடந்த சில நாட்களுக்கு முன் இவருக்கும் விஷ ஊசி செலுத்தப்பட்டது. அப்போது இருவரும் கை கோர்த்தபடி மரணித்தனர். இருவரும் இணைந்தபடி மரணித்திருப்பது பார்ப்போரை நெகிழ செய்தது

இந்தியாவும், உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில், சில வகையான கருணை கொலைகளை அங்கீகரிக்கும் நாடுகளின் பட்டியலில் சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.