வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: ‛‛ இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே சிறந்த ராணுவ உறவு உள்ளது” என அமெரிக்காவின் ராணுவ தலைமையகம் பென்டகன் தெரிவித்துள்ளது.
இந்திய ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே அமெரிக்காவுக்கு 4 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் இரு நாடுகளின் ராணுவ உறவுகள் குறித்து பென்டகனின் ஊடக துணை செயலாளர் சபரீனா சிங் கூறியதாவது: நாங்கள் இந்தியா உடன் சிறந்த ராணுவ உறவை கொண்டுள்ளோம். நாங்கள் இந்தியாவில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
இந்திய ராணுவ தலைமை தளபதி அமெரிக்காவின் ராணுவ தலைமை தளபதியான ஜெனரல் ராண்டி ஜார்ஜ் உடன் உயர்மட்ட ஆலோசனைகளை மேற்கொள்வார். பின்னர் அவர் மூத்த ராணுவ அதிகாரிகளுடனும் உரையாடுவார் என மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement