OpenAI Sora வீடியோக்களை எப்படி உருவாக்குகிறது? நீங்கள் பயன்படுத்துவது எப்படி?

ChatGPT-யை உருவாக்கிய OpenAI நிறுவனம் ஏஐ துறையில் மிகப்பெரிய அடுத்த அப்டேட்டை வெளியிட்டுள்ளது. இது டெக் உலகில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. அதாவது ஓபன் ஏஐ நிறுவனத்தின் அடுத்த அப்டேட்டான Sora ஏஐ வெளியிட்டுள்ளது. நீங்கள் கொடுக்கும் வாக்கியங்களை வைத்து ஒரு நிமிட வீடியோவை உருவாக்கும். இதை செய்யும் பல AI கருவிகள் இருக்கும்போது சோரா ஏன் இப்படி ஒரு சலசலப்பை உருவாக்குகிறது?, சோராவால் மட்டும் இவ்வளவு சிறப்பாகச் செய்ய முடிகிறது? என்று பலருக்கும் கேள்வி எழுந்துள்ளது. 

சோரா, நீங்கள் கொடுக்கும் வாக்கியங்களில் இருந்து துல்லியமாகவும், பிரம்மிக்க வைக்கும் அளவிலும் ஒரு நிமிட வீடியோவைக் கொடுக்கிறது. இது குறித்து ஓபன் ஏஐ நிறுவனர் சாம் ஆல்ட்மேன் பேசும்போது, நிஜ உலகில் தொடர்புடைய, மக்களின் சிக்கல்களை எளிதில் தீர்க்கக்கூடிய வகையிலான பியற்சி மாதிரிகளை உருவாக்கும் குறிக்கோளுடன் இந்த ஏஐ உருவாக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். சோரா, பயன்படுத்துவதற்கு எளிதாகவும், எதார்த்தமான வகையிலான வீடியோக்களையும் உருவாக்கிக் கொடுக்க முடியும். 

OpenAI Sora என்றால் என்ன?

Sora என்பது OpenAI ஆல் உருவாக்கப்பட்ட ஒரு AI மாடலாகும் –– DALL·E மற்றும் GPT மாடல்களில் கடந்தகால ஆராய்ச்சியின் அடிப்படையில் உருவாக்கக்பட்டது. நீங்கள் கொடுக்கும் கற்பனை உரைகளின் அடிப்படையில் ஒரு நிமிட வீடியோவை அதனால் உருவாக்க முடியும். அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே உருவாக்கிய வீடியோவில் சிலவற்றை சேர்க்கவும் அல்லது நீக்கவும் இதனால் முடியும். உயர்தர காட்சி மற்றும் துல்லியத்தின் அடிப்படையில் வீடியோ இருக்கும். பல்வேறு கதாபாத்திரங்கள், துல்லியமான செயல்கள் மற்றும் விரிவான பின்னணியுடன் கூடிய சிக்கலான காட்சிகளை கூட சோரா உருவாக்க முடியும். 

OpenAI Sora எப்படி பயன்படுத்துவது? 

சோராவை தற்போது குறிப்பிட்ட குழு உறுப்பினர்களுக்கு மட்டுமே அணுக முடியும். தவறான தகவல், வெறுக்கத்தக்க கன்டென்டுகள் மற்றும் அபாயமான பகுதிகளை ஆய்வு செய்ய ஓபன் ஏஐ நிறுவனம் கூடுதலாக இதற்கான அணுகலை திரைப்பட கலைஞர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும் இதன் அணுகலை கொடுக்க திட்டமிட்டுள்ளது. அவர்களின் கருத்துக்களை சேகரித்து இதனை இன்னும் மேம்படுத்தவும் முடிவு செய்திருக்கிறது ஓபன் ஏஐ நிறுவனம். இருப்பினும், இந்த மாடலை இறுதியில் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கச் செய்யும் எண்ணம் நிறுவனத்திற்கு உள்ளது என்றாலும், அனைத்து விதமான ஆய்வுகளுக்குப் பிறகே இந்த திட்டம் நடைமுறைக்கு வரும். 

ஓபன் ஏஐ சோரா பாதுகாப்பானதா? 

இதற்கான ஆய்வுகளில் தான் இப்போது ஓபன் ஏஐ நிறுவனம் ஈடுபட்டுள்ளது. சோரா ஏஐ அப்டேட் செய்வதற்கான அனைத்து தரப்பு வல்லுநர்களைக் கொண்டு ஆய்வு செய்து வருகிறது. பாலியல் சார்ந்த கன்டென்டுகள் உருவாக்கம் முற்றிலும் இதில் தடை செய்யப்பட்டிருக்கிறது. அப்படியான உரைகளை கொடுத்தால் வீடியோக்களை உருவாக்காது. கல்வியாளர்கள் மற்றும் கலைஞர்களுடன் கூட்டணி அமைத்து சோராவை மேம்படுத்தும் பணிகள் துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.