இலங்கை இராணுவப் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி ஏற்பாடு செய்திருந்த இராணுவ பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மாநாடு வெள்ளிக்கிழமை (பெப்ரவரி 16) வெலிசரவில் உள்ள அலை ஏரி கடற்படை மண்டபத்தில் ஆரம்பமானது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசி பீஎஸ்சி எம்பிள் (ஓய்வு) அவர்கள் கலந்து கொண்டார்.
அன்றைய நிகழ்வுகள் மங்கல விளக்கு ஏற்றி ஆரம்பிக்கப்பட்டதுடன், வீரமரணமடைந்த போர் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. டபிள்யூஎஸ்ஓ 2 இன் தலைமை நிர்வாக அதிகாரி வைத்தியர் சஞ்சீவ வீரவர்ண சிறப்புரை ஆற்றினார், அதைத் தொடர்ந்து பிரதம அதிதியின் உரையும் இடம்பெற்றது.
பின்னர், இலங்கை இராணுவ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் வார இதழ் அதிகாரப்பூர்வமாக வலைத்தளத்துடன் இணைந்து தொடங்கப்பட்டது. மற்றும் அதன் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு கெளரவ உறுப்பினர் பதவிகளை வழங்கிய பின்னர் சில குழு படங்களும் எடுத்துக் கொண்டனர். மாநாட்டின் போது, இராணுவ பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பாக பெறுமதிமிக்க கல்வித் தலைப்புகளுடன் மூன்று செயலமர்வுகளும் நடாத்தப்பட்டன.
பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானி, இலங்கை கடற்படை மற்றும் விமானப்படைத் தளபதிகள், இராணுவ பதவி நிலைப் பிரதானி, முப்படையின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், பொறியியலாளர்கள் மற்றும் அறிஞர்கள் ஆகியோர் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டனர்.