சென்னை: மதுரையில் 6.4 லட்சம் சதுர அடியில் ரூ.345கோடியிலும், திருச்சியில் 6.3 லட்சம் சதுர அடியில் ரூ.350 கோடியிலும் புதிய டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
மேலும் சில முக்கிய அறிவிப்புகள் பின்வருமாறு:
* நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 100 கலை மற்றும் அறிவியல், பொறியியல் கல்லூரிகளில் திறன் ஆய்வகங்களுக்கு ரூ.200. கோடி ஒதுக்கீடு.
* மத்திய அரசு பணியில் சேர ஆயிரம் பேருக்கு சிறப்பு பயிற்சி அளிக்க ரூ. 6 கோடி ஒதுக்கீடு.
* 1 லட்சம் மாணவர்களுக்கு ரூ.2500 கோடி கல்விக் கடன்.
* ராமநாதபுரத்தில் கடல்சார் நீர் விளையாட்டு மையம் அமைக்கப்படும்.
* மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்காக 6 இடங்களில் பாரா தடகள விளையாட்டு மையங்கள் அமைக்கப்படும்.
* புற்றுநோய் மேலாண்மை இயக்கம் அமைக்கப்படும்.
* சிங்கார சென்னை 2.0 திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு.
* புதிய தொழிற்பயிற்சி நிறுவனங்கள் அமைக்கப்படும்.
* துணை சுகாதார மையங்கள் முதல் மருத்துவக் கல்லூரிகள் வரை அனைத்து நிலைகளிலும் மருத்துவக் கட்டமைப்புகளைத் தரம் உயர்த்த ரூ.333 கோடி ஒதுக்கீடு.
* தஞ்சாவூரில் ரூ.120 கோடி மதிப்பீட்டில் சிப்காட் தொழிற் பூங்கா அமைக்கப்படும்.
* விருதுநகர் மற்றும் சேலத்தில் ரூ.2,483 கோடியில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும். இதனால் 2.08 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
* தூத்துக்குடியில் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விண்வெளித் மற்றும் உந்துசக்திப் பூங்கா அமைக்கப்படும்.
* மதுரையில் 6.4 லட்சம் சதுர அடியில் ரூ.345கோடியிலும், திருச்சியில் 6.3 லட்சம் சதுர அடியில் ரூ.350 கோடியிலும் புதிய டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும்.
* தஞ்சாவூர், சேலம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் நியோ டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும். 13 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
* திருப்பரங்குன்றம், திருநீர்மலை கோயில்களில் ரோப் கார் வசதிகள் ஏற்படுத்தப்படும்.
* கரூர், ஈரோடு, விருதுநகர் மாவட்டத்தில் சிறிய ஜவுளிப் பூங்காக்களுக்கு ரூ.20 கோடி ஒதுக்கீடு.
* கீழடி உட்பட 8 இடங்களில் அகழாய்வு மேற்கொள்ள ரூ.5 கோடி ஒதுக்கீடு.
மத்திய அரசு மீது தமிழக அரசு குற்றச்சாட்டு
இது குறித்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறியிருப்பதாவது: மெட்ரோ பணிகளுக்கு ஒப்புதல் வழங்குவதில் மத்திய அரசு தாமதம் செய்கிறது.
தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து இதுவரை தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கவில்லை.
இயற்கை பேரிடர்களால் தமிழக அரசின் நிதிநிலை நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஜி.எஸ்.டியால் ஒரு ஆண்டிற்கு 20 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்