
சமந்தாவின் பிட்னஸ்
குஷி படத்திற்கு பிறகு சில மாதங்கள் பிரேக் எடுத்திருந்த சமந்தா, சிகிச்சை, உடற்பயிற்சி, யோகா ஆகியவற்றின் மூலம் முழு உடல் தகுதி பெற்று மீண்டும் புதிய படங்களில் நடிக்க முயற்சி எடுத்து வருகிறார். அதோடு சிட்டாடல் வெப் தொடரிலும் தற்போது நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய உடல் எடை, உடல் தகுதிகள் மற்றும் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். அதோடு தான் உடற்பயிற்சி செய்யும் இடத்தில் உள்ள மரம், ஏரி அமைந்த இயற்கை சூழலில் எடுத்த புகைப்படங்களையும் அவர் வெளியிட்டு இருக்கிறார். அப்படி தான் வெளியிட்ட புகைப்படம் ஒன்றில் தன்னுடைய உடல் எடை 50.1 கிலோ என்றும் குறிப்பிட்டு இருக்கிறார் சமந்தா.