வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பெர்லின்: ஜெர்மனியில் கஞ்சா செடியை வீட்டிலேயே வளர்ப்பதற்கும், கஞ்சா பயன்பாட்டை சட்டபூர்வமாக்கும் மசோதா பார்லிமென்டில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐரோப்பிய நாடான ஜெர்மனி ஐரோப்பிய ஒன்றியத்தில் மிகப் பெரிய பொருளாதார நாடாக உள்ளது.
இந்நிலையில் கஞ்சாவுக்கு விதிக்கப்பட்ட தடையை ஜெர்மன் அரசு நீக்கி, அதை சட்டப்பூர்வமாக அனுமதித்துள்ளது. இது தொடர்பாக பாராளுமன்றத்தில் மசோதா கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி வீட்டிலேயே மூன்று கஞ்சா செடிகளை வளர்க்கலாம். தனிநபர் 25 கிராம் அளவுக்கும் வீட்டில் 50 கிராம் அளவுக்கும் கஞ்சாவை வைத்துக் கொள்ளலாம்.
ஏப்ரல் 1 முதல் கஞ்சாவை வைத்துக்கொள்ளவும் வளர்க்கவும் அனுமதி அமலாகவுள்ளது. அரசின் புதிய மசோதாவிற்கு 16 எதிர்க்கட்சிகள் மறு பரிசீலனை செய்ய கோரிக்கை விடுத்துள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement