வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பெங்களூரு: கர்நாடகாவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த இந்திய வம்சாவளி பிரிட்டன் பெண் எழுத்தாளர் நிதாஷா கவுல் என்பவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து அவர் உடனடியாக மத்திய அரசால் நாடு கடத்தப்பட்டார்.
பிரிட்டனின் வெஸ்மின்ஸ்டர் பல்கலை., பேராசிரியராக இருப்பவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எழுத்தாளர் நிதாஷா கவுல்.இவர் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் அரசியலமைப்பு மற்றும் தேசிய ஒற்றுமை மாநாட்டின் பிரதிநிதியாக பங்கேற்க அழைக்கப்பட்டார். இதற்கான ஏற்பாடுகளை மாநில காங்,, அரசு செய்திருந்தது. அவருக்கு பல்வேறு அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. பெங்களூரு விமான நிலையத்திலேயே அவர் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறியது, நிதாஷா பாகிஸ்தான் நாட்டவரை திருமணம் செய்துள்ளார். இஸ்லாம் மதத்திற்கும் மாறியுள்ளார். சீனாவின் கைக்கூலியாக செயல்படுகிறார்.
இவர் இந்தியா வந்துள்ளதன் நோக்கம் இந்தியாவிற்கு எதிரான பிரச்சாரத்தை மேற்கொள்ளவே. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து நிதாஷா கூறுகையில், எனக்கு அனுமதி மறுப்பதற்கான காரணம் தெரியவில்லை. முறையாக எனக்கு அதிகாரப்பூர்வ கடிதம் அனுப்பினர். அதனை ஏற்று வந்தேன். டில்லியிலிருந்து எனக்கு எந்த அறிவிப்பும் வரவில்லை என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement