புதுடில்லி, குஜராத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி.,யாக போட்டியின்றி தேர்வானதை தொடர்ந்து, ஹிமாச்சல பிரதேச ராஜ்யசபா எம்.பி., பதவியை ஜே.பி.நட்டா நேற்று ராஜினாமா செய்தார்.
பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, ஹிமாச்சல பிரதேசத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வானார்.
இவரது பதவிக்காலம் ஏப்ரலில் முடிவுக்கு வருகிறது. ஹிமாச்சலில் காங்., ஆட்சி நடப்பதால் அங்கிருந்து நட்டா மீண்டும் எம்.பி.,யாக தேர்வாவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதை தொடர்ந்து, குஜராத்தில் இருந்து அவர் போட்டியின்றி சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில், ஹிமாச்சல் ராஜ்யசபா எம்.பி., பதவியை அவர் நேற்று ராஜினாமா செய்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement