Underwater metro train service: Modi to inaugurate tomorrow in Kolkata | நீருக்கடியில் மெட்ரோ ரயில் சேவை : கோல்கட்டாவில் நாளை மோடி துவக்கி வைக்கிறார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

கோல்கட்டா: மேற்குவங்கத்தில் ஹூக்ளி நதிக்கடியில் மெட்ரோ ரயில் சேவையை நாளை பிரதமர் மோடி துவக்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேற்குவங்க மாநிலம் கிழக்கு-மேற்கு வழித்தடத்தின் ஒரு பகுதியான ஹவுரா மைதானம் -எஸ்பிளனேட் மெட்ரோ பாதை இடையே ஹூக்ளி நதியின் நீர் மட்டத்தில் இருந்து 16 மீ ஆழத்தில் 520 மீ தூரத்துக்கு மெட்ரோ ரயில் பாதை வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது.

இது இந்தியாவின் முதல் நீருக்கடியில் செல்லும் மெட்ரோ ரயில் சேவை என கூறப்படுகிறது. இதன் சேவையை பிரதமர் மோடி நாளை (மார்ச்.06) துவக்கி வைக்கிறார். இந்த மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்கியதும் அங்கு சாலை போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இது குறித்து கோல்கட்டா மெட்ரோ ரயில் பொது மேலாளர் கூறியது, இந்த மெட்ரோ ரயில் பாதை வழித்தடம் வாயிலாக தினமும் 7 லட்சம் பயணிகள் பயணம் செய்வர். 45 வினாடிகளில் இந்த பாதையை மெட்ரோ ரயில் கடந்து செல்லும் என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.