J.பேபி (தமிழ்)

சுரேஷ் மாரி இயக்கத்தில் தினேஷ், ஊர்வசி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘J.பேபி’. குடும்பத்தினர் மற்றும் சமூகத்தின் அழுத்தத்தினால் வீட்டை விட்டுச் சென்ற அம்மாவைத் தேடும் மகன், அம்மாவைப் புரிந்துகொண்டு கண்டுபிடித்தாரா என்பதுதான் இதன் கதைக்களம். இத்திரைப்படம் நேற்று வெளியாகியுள்ளது.
சிங்கப்பெண்ணே (தமிழ்)

ஜெ.எஸ்.பி. சதீஷ் குமார் இயக்கத்தில் மாதவி லதா, சமுத்திரக்கனி, சென்ராயன் மற்றும் ஷில்பா மஞ்சுநாத் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சிங்கப்பெண்ணே’. எளியப் பிண்ணியில் இருந்து வரும் ஒரு பெண், சமூகத்தில் இருக்கும் தடைகளை மீறி நீச்சல் வீராங்கனையாக சாதிப்பதுதான் இதன் கதைக்களம். இத்திரைப்படம் மார்ச் 8ம் தேதி (நேற்று) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே (தமிழ்)

செந்தூர் பாண்டியன், பிரித்தி கரண், சுரேஷ் தமிழ்ச்செல்வன், தமிழ்ச்செல்வி, பூர்ணிமா ரவி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாக்கியுள்ள திரைப்படம் ‘நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’. அடல்ட் காமெடி, இளம் தலைமுறையினரின் ஜாலியான காதல் திரைப்படமான இது மார்ச் 8ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
கார்டியன் (தமிழ்)

குரு சரவணன் இயக்கத்தில் ஹன்சிகா, சுரேஷ் சந்திரா, ஶ்ரீராம், ராஜேந்திரன், தங்கதுரை உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கார்டியன்’. ஹாரர் திரில்லர் திரைப்படமான இது மார்ச் 8ம் தேதி (நேற்று) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
அரிமாபட்டி சக்திவேல் (தமிழ்)

ரமேஷ் கந்தசாமி இயக்கத்தில் சார்லி, இமான் அண்ணாச்சி, மேக்னா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அரிமாபட்டி சக்திவேல்’. கிராமத்தில் நடக்கும் சாதிப் பிரச்னைகளைப் பற்றிப் பேசும் இத்திரைப்படம் மார்ச் 8ம் தேதி (நேற்று) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
Thankamani (மலையாளம்)

ரதீஸ் ரகுநந்தன் இயக்கத்தில் திலீப், பிரானித்தா, அஜ்மல் அமீர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Thankamani’. க்ரைம் திரில்லர் திரைப்படமான இது மார்ச் 8ம் தேதி (நேற்று) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
Bhimaa (தெலுங்கு)

ஷர்ஷா இயக்கத்தில் தொட்டேம்புடி கோபிசந்த், பிரியா பவானி சங்கர், மாளவிகா ஷர்மா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Bhimaa’. ஆக்ஷன் திரில்லர் திரைப்படமான இது மார்ச் 8ம் தேதி (நேற்று) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
Gaami (தெலுங்கு)

வித்யாகர் ககிடா இயக்கத்தில் விஷ்வக் சென், சாந்தினி செளத்ரி, முகமது ஷமது உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Gaami’. அட்வன்சர், ஃபேன்டஸி திரைப்படமான இது மார்ச் 8ம் தேதி (நேற்று) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
Shaitaan (இந்தி)

விகாஷ் பாஹ்ல் இயக்கத்தில் அஜய் தேவ்கன், ஆர். மாதவன், ஜோதிகா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Shaitaan’. ஹாரர் திரில்லர் திரைப்படமான இது மார்ச் 8ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
All of Us Strangers (ஆங்கிலம்)

ஆண்ட்ரூ ஹைக் இயக்கத்தில் ஆண்ட்ரூ ஸ்காட், பால் மெஸ்கல், ஜாமியா பெல் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘All of Us Strangers’. ரொமான்டிக் காதல் திரைப்படமன இது மார்ச் 8ம் தேதி (நேற்று) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இந்த வார ஓடிடி ரிலீஸ்கள்…
Valari (தெலுங்கு) – Etv win

எம்.மிருத்திகா சந்தோஷினி இயக்கத்தில் ஸ்ரீகாந்த், ரித்திகா சிங், கேசவ் தீபக், சித்தார்த் கொல்லபுடி, பர்னிதா ருத்ர ராஜு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Valari’. ஹாரர் திரில்லர் திரைப்படமான இது மார்ச் 8ம் தேதி (இன்று) ‘Etv win’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Ricky Stanicky (ஆங்கிலம்)

பீட்டர் ஃபாரெல்லி இயக்கத்தில் ஜாக் எஃப்ரான், ஜான் சீனா, ஆண்ட்ரூ சாண்டினோ உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Ricky Stanicky’. பாலிய வயதிலிருந்து நண்பர்களாக இருபவர்களின் காமெடி, கலாட்டா நிறைந்த திரைப்படமான இது மார்ச் 8ம் தேதி ‘Amazon Prime Video’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Damsel (ஆங்கிலம்)

ஜுவான் கார்லோஸ் ஃப்ரெஸ்னாடில்லோ இயக்கத்தில் மில்லி பாபி பிரவுன், ரே வின்ஸ்டோன், ஏஞ்சலா பாசெட் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Damsel’. ஆக்ஷன், அட்வன்சர், ஃபேன்டஸி நிறைந்த இத்திரைப்படம் மார்ச் 8ம் தேதி (இன்று) திரையரங்குகளில் ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
இந்த வார வெப்சீரிஸ்கள்
Heart beat (தமிழ்) – Disney + Hotstar

தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் அனுமோல், தீபா பாலு, சாருகேஷ், ஆர்.ஜி.ராம், சர்வா, பதினேகுமார், குரு லக்ஷ்மன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Heart beat’. இந்த வெப்சீரிஸ் ‘Disney + Hotstar’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Maharani – 3 (இந்தி) – Sony Liv

சவுரப் பாவே இயக்கத்தில் ஹுமா குரேஷி, அமித் சியால் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள வெப்சீரிஸ் ‘Maharani – 3’. அரசியல் திரில்லர் சீரிஸான இதன் 3வது சீசன், மார்ச் 8ம் தேதி ‘Sony Liv’-இல் வெளியாகியுள்ளது.
The Regime (ஆங்கிலம்) – HBO max

வில் ட்ரேசி இயக்கத்தில் கேட் வின்ஸ்லெட், மத்தியாஸ் ஸ்கோனெர்ட்ஸ், குய்லூம் காலியென் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள வெப்சீரிஸ் ‘The Regime’. ‘HBO max’ படைப்பான இது இந்தியாவில் ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
Showtime (இந்தி) – Disney + Hotstar

சுமித் ராய் இயக்கத்தில் இம்ரான் ஹாஷ்மி, நசிருதீன் ஷா, மௌனி ராய் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள வெப்சீரிஸ் ‘Showtime’. இந்த வெப்சீரிஸ் ‘Disney + Hotstar’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
தியேட்டர் டு ஓடிடி
Rani (மலையாளம்) – Manoramaa max

நிஜாமுதீன் நாசர், சஜிஷ் பிரான்சிஸ், முனீர் பன்னல்ப் உள்ளிட்டோர் இயக்கத்தில் கவிதா பிஜு, ஜெயன் சேர்த்தலா, ஷிவானி மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Rani’. இத்திரைப்படம் ‘Manoramaa max’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Bachelor Party (தெலுங்கு) – Aha

அபிஜித் மகேஷ் இயக்கத்தில் சுதா பெலவாடி, கானா பட், திகந்த் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Bachelor Party’. காமெடி திரைப்படமான இது ‘Aha’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Sound Party (தெலுங்கு) – Aha

சஞ்சய் ஷெரி இயக்கத்தில் விஜே சன்னி, ரித்திகா ஸ்ரீனிவாஸ், சிவன்நாராயணா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Sound Party’. இப்படம் ‘Aha’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Anweshippin Kandethum (மலையாளம்) – Netflix

டார்வின் குரியகோஸ் இயக்கத்தில் டோவினோ தாமஸ், சித்திக், இந்திரன்ஸ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள மலையாளத் திரைப்படம் ‘Anweshippin Kandethum’. போலீஸ் க்ரைம் திரில்லர் திரைப்படமான இது (இன்று) பிப்ரவரி 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
மெரி கிறிஸ்துமஸ் (இந்தி/தமிழ்) – Netflix

விஜய் சேதுபதி, கத்ரினா கைஃப், ராதிகா சரத்குமார், ராதிகா ஆப்தே ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம், ‘மெரி கிறிஸ்துமஸ்’. பாலிவுட் இயக்குநர் ஶ்ரீராம் ராகவன் இத்திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இப்படம் ஒரே சமயத்தில் இந்தியிலும் தமிழிலும் எடுக்கப்பட்டது. இத்திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு என்ட்ரி கொடுக்கிறார் நடிகை கத்ரினா கைஃப். இப்படம் ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.