
சுற்றுலா சென்ற இடத்தில் ரொமான்டிக் போட்டோஷூட் நடத்திய நயன்தாரா – விக்னேஷ் சிவன்!
கடந்த சில தினங்களுக்கு முன்பு நயன்தாரா- விக்னேஷ் சிவன் ஆகியோர் உயிர், உலக் என்ற தங்களது இரண்டு மகன்களுடன் சவுதி அரேபியாவுக்கு சுற்றுலா சென்றார்கள். அப்போது விமானத்தில் தாங்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் வெளியிட்டு இருந்தார் நயன்தாரா. அதையடுத்து சவுதி அரேபியாவில் கார் ரேஸ் நடைபெற்ற மைதானத்துக்கு சென்றிருந்த விக்னேஷ்சிவன், நயன்தாரா ஆகிய இருவரும் கார் பந்தயம் நடப்பதை தாங்கள் பார்க்கும் வீடியோவையும் வெளியிட்டு இருந்தார்கள்.
இந்நிலையில் தற்போது சவுதியில் தாங்கள் இருவரும் மாறுபட்ட உடையணிந்து ரொமாண்டிக் போட்டோஷூட் நடத்தி அது குறித்த புகைப்படங்களையும் இன்ஸ்ட்டாகிராமில் வெளியிட்டுள்ளார்கள்.