சென்னை: இயக்குநர் நெல்சன் திலீப்குமார் கோலமாவு கோகிலா படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாகி தன்னுடைய சிறப்பான ஸ்கிரிப்டால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் இணைந்து டாக்டர் படத்தையும் வெற்றிப்படமாக்கியிருந்தார். இதையடுத்து விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கும் வாய்ப்பு நெல்சனுக்கு கிடைத்தது. ஆனால் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையில் வெளியான இந்தப் படம் சொதப்பலாகவே அமைந்தது. ஆனாலும் விஜய் ரசிகர்களை